திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

23 வயது வித்தியாசமுள்ள நடிகையுடன் ஜோடி போடும் ஜெயம் ரவி.. வொர்க் அவுட் ஆகுமா இந்த கெமிஸ்ட்ரி

Actor Jayam Ravi: தந்தையின் சிபாரிசில் நடிக்க வந்து முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் தான் ஜெயம் ரவி. மேலும் தன் படத்தின் மூலம் வெற்றியை கண்டு வரும் இவருடன் 23 வயது வித்தியாசம் பார்க்காமல் ஜோடி சேர இருக்கும் நடிகை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

சமீபத்தில் இவர் மேற்கொண்ட பொன்னின் செல்வன் கதாபாத்திரம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. அதை தொடர்ந்து அகிலன் என்னும் படத்திற்கு பிறகு இவர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் தன் 32 ஆவது படத்தில் கமிட்டாகி உள்ளார்.

Also Read: ஒரே இடத்தில் படப்பிடிப்பை நடத்த போகும் தனுஷ்.. மாசாக வந்துள்ள 50வது பட அப்டேட்

இப்படத்திற்கு ஜீனி என்ற பெயரை அறிவித்துள்ளனர். ஐசரி கணேஷ் தயாரிப்பில் மேற்கொள்ளும் இப்படம் 100 கோடி ப்ராஜெக்ட்டில் அமைய உள்ளது. அதை தொடர்ந்து இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார். அதிலும் குறிப்பாக இப்படத்தில் சுமார் 23 வயது வித்தியாசம் இருக்கும் இளம் நடிகையை ஜோடியாக ஏற்று நடிக்க போகிறார் ஜெயம் ரவி.

இயக்குனர் மிஷ்கினின் உதவியாளரான புவனேஷ் ஏற்கும் முதல் பெரிய ப்ராஜெக்ட் படம் தான் ஜீனி. பல எதிர்பார்ப்புகளை கொண்டு உருவாக இருக்கும் இப்படத்தில் இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

Also Read: சுயபுத்தி இல்லாமல் புகார் கொடுத்த ரட்சிதா.. கிடுக்கு பிடி போட்டு உண்மையை வர வைத்த போலீஸ்

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பின் கீழ் உருவாகும் இப்பட பூஜை நாளை நடைபெற உள்ளது. மேலும் இத்தனை வயது வித்தியாசம் இடையே இவர்களின் ஜோடி பொருத்தத்தை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் மாறுபட்ட பரிமாணத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பும் இம்மாதம் 23 முதல் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் கஸ்டடி படத்திற்கு பிறகு கீர்த்தி ஷெட்டி ஏற்கும் இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read: சாப்பாட்டை பிடுங்கி விட்டு விரட்டி அடிக்கப்பட்ட எம்ஜிஆர்.. முதலமைச்சர் ஆனதும் பதிலடி கொடுத்த சம்பவம்

Trending News