ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஜெயம் ரவி போட்ட 4 கண்டிஷன்.. என்ன பிரதர் இதெல்லாம்?

Jayam Ravi – Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் இரண்டாவது ஹீரோவாக ஜெயம் ரவி நடிக்கிறார். இதை எந்த விதத்தில் எடுத்துக் கொள்வது என சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது. சிவகார்த்திகேயன் இப்படி அபரிமிதமான வளர்ச்சியை அடைந்திருக்கிறார் என பெருமைப்படுவதா இல்லை ஜெயம் ரவியின் சினிமா மார்க்கெட் குறைந்து விட்டதோ என வருத்தப்படுவதா என தெரியவில்லை.

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புறநானூறு படத்தில் ஜெயம் ரவி இரண்டாவது ஹீரோ. சூர்யா இந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற போது விஜய் வர்மா, காளிதாஸ் ஜெயராம், நஸ்ரியா போன்றோர் இந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டினார்கள்.

சிவகார்த்திகேயன் என்றதும் வேண்டவே வேண்டாம் என ஜகா வாங்கி விட்டார்கள். இதில் தற்போது காளிதாஸ் நடிக்க இருந்த கேரக்டரில் அதர்வா நடிக்க இருக்கிறார். பாலிவுட் நடிகர் விஜய் வர்மா நடிக்க இருந்த கேரக்டரில் ஜெயம் ரவி நடிக்கிறார்.

ஜெயம் ரவி போட்ட 4 கண்டிஷன்

மேலும் நஸ்ரியா கேரக்டரில் ஸ்ரீலிலா ஒப்பந்தமாக இருக்கிறார். என்னதான் நல்ல கேரக்டர், வரும் வாய்ப்பை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஜெயம் ரவி நினைத்தாலும் ஒரு பக்கம் சீனியர் ஹீரோ என்ற ஈகோ கொஞ்சம் இருக்கத்தான் செய்யும்.

அதனால் இயக்குனர் சுதா கொங்கராவிடம் 4 கண்டிஷன் போட்டிருக்கிறாராம். அதாவது கான்சிட் விஷயத்தில் தன்னை கட்டாயப்படுத்தக் கூடாது, எந்த ஒரு காட்சியிலும் சிவகார்த்திகேயனிடம் நான் அடி வாங்குவது போலவோ, அல்லது அவர் என்னை அடிப்பது போல் இருக்கக் கூடாது.

நான் எவ்வளவு சம்பளம் கேட்கிறேனோ அதை கொடுக்க வேண்டும். படத்தின் பிரமோஷன் விழாக்களில் சிவகார்த்திகேயனுக்கு இணையாக தனக்கும் எல்லா முக்கியத்துவமும் இருக்க வேண்டும் என உறுதியாக சொல்லி இருக்கிறார்.

Trending News