வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பொன்னியின் செல்வனால் கொடி பறக்கும் ஜெயம் ரவியின் கேரியர்.. செகண்ட் இன்னிங்ஸ்க்கு ரொம்பிய சூட்கேஸ்

நடிகர் ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது. பொன்னியின் செல்வன் வாசகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட அருள் மொழி வர்மன் கேரக்டரில் ஜெயம் ரவி நடித்திருந்தார். இந்த படம் ரவிக்கு ஒரு நல்ல ரீச்சை கொடுத்து இருக்கிறது.

கடந்த 2016 க்கு பிறகு நடிகர் ஜெயம் ரவிக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. மிருதன், டிக் டிக், தனி ஒருவன் போன்ற படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன. மற்றபடி ஜெயம் ரவியின் சினிமா கேரியர் கொஞ்சம் சறுக்கலாகவே இருந்தது.

Also Read: 100 நாட்களை தாண்டிய ஜெயம் ரவியின் 6 படங்கள்.. பல ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்த மனுஷன்

2015 ஆம் ஆண்டு ஜெயம் ராஜா இயக்கிய தனி ஒருவன் திரைப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருந்தார். இது ராஜா இயக்கிய முதல் நேரடி தமிழ் திரைப்படம் ஆகும். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் ரவி இதன் இரண்டாம் பாகத்தை இயக்குமாறு ராஜாவிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் ராஜா பிசியாக இருந்ததால் அவரால் இந்த படத்தின் வேலைகளை ஆரம்பிக்க முடியவில்லை.

இப்படி சறுக்கலில் சிக்கிக் கொண்டிருந்த ரவியின் சினிமா கேரியரை காப்பாற்றும் விதமாக அமைந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இவர் நடித்த அருள் மொழி வர்மன் கேரக்டர் தான் பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய மையப்புள்ளி. இதனாலேயே ஜெயம் ரவி இந்த படத்தில் அதிகம் கவனிக்கப்பட்டார்.

Also Read: நல்லாதான போயிட்டு இருந்துச்சு.. ஜெயம் ரவியின் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்ட அண்ணன்

இப்போது பொன்னியின் செல்வனால் ஜெயம் ரவியின் சினிமா கேரியரும் புத்துயிர் பெற்றிருக்கிறது. அடுத்தடுத்து பிளாப் படங்கள் கொடுத்து வந்த ஜெயம் ரவியின் அடுத்த ரிலீசுகளான அகிலன், இறைவன் திரைப்படங்கள் நல்ல விலைக்கு பேசப்பட்டு இருக்கின்றன. இந்த படங்களின் சேட்டிலைட் உரிமங்களும் அதிக விலைக்கு பேசப்பட்டு இருக்கின்றன.

அகிலன் முழு நீள ஆக்சன் திரைப்படம் ஆகும். இந்த படத்தை பூலோகம் படம் இயக்கிய என்.கல்யாண் கிருஷ்ணன் இயக்குகிறார். ப்ரியா பவானி சங்கர் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார். ஜெயம் ரவியை வைத்து ஜன கன மண படத்தை இயக்கிய அகமது மீண்டும் ரவியுடன் இறைவன் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ரவியுடன் டாப்ஸி, ரகுமான், அர்ஜுன் ஆகியோர் நடிக்கின்றனர்.

Also Read: ஜெயம் ரவி படம் நடிகைக்கு தொடர்ந்து வரும் கற்பழிப்பு மிரட்டல்.. வீட்டிற்குள்ளேயே முடங்கிய சோகம்

Trending News