புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எல்லாத்தையும் வெறுத்து போன ஜெயம் ரவிக்கு வந்த புது ஆசை.. கவலையை மறக்க சந்தோஷத்தை தேடும் வர்மன்

Jayam Ravi: எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் தன் உண்டு தன் வேலை உண்டு என்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஹீரோ ஜெயம் ரவி. இவருக்கும் இவருடைய நடிப்புக்கும் யாரும் நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்ததே இல்லை. அந்த அளவிற்கு ஒரு சமத்தான ஹீரோ. ஆனால் அப்படிப்பட்ட இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் கடந்த சில நாட்களாக சர்ச்சை பூதாகரமாக வெடித்திருக்கிறது.

அதாவது ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்து தான் ஹாட் டாபிக்காக இணையத்தில் போய்க் கொண்டிருந்தது. ஆனால் இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஜெயம் ரவி அவருடைய தனிப்பட்ட கருத்தை சமூக வலைதளங்களில் கொடுத்திருக்கிறார். இப்படி ஒரு பக்கம் விவாகரத்து போய்க் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் பிரியா மோகன் மற்றும் பூமிக்கா உடன் இணைந்து பிரதர் படத்தில் நடித்திருக்கிறார்.

இப்படம் இந்த மாத கடைசியில் தீபாவளியை முன்னிட்டு ரிலீசாக தயாராகி இருக்கிறது. இதற்கிடையில் சமீபத்தில் நடித்த படங்கள் எதுவும் ஜெயம் ரவிக்கு வெற்றியை கொடுக்கவில்லை. தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்துட்டு வரும் ஜெயம் ரவிக்கு அடுத்து எப்படி நம்மளுடைய கேரக்டரை தூக்கி நிறுத்த வேண்டும் என்ற ஒரு கேள்விக்குறி பதட்டத்துடன் அமைந்திருக்கிறது.

எப்பொழுதெல்லாம் ஜெயம் ரவி சினிமாவில் தோல்விகளை தழுவி துவண்டு போய் இருக்கிறாரோ, அப்பொழுது இவருக்கு கைகொடுக்கும் விதமாக இவருடைய அண்ணன் உதவி செய்துவிடுவார். அந்த வகையில் இவர்களுடைய கூட்டணியில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் வந்தால் ஜெயம் ரவிக்கு நிச்சயம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படத்தின் ப்ரோமோஷன் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் ஜெயம் ரவி பேட்டிகளை கொடுத்து வருகிறார். அப்படி இப்பொழுது கொடுத்த ஒரு பேட்டியில் இவர் பேசுவதை பார்க்கும் பொழுது ரொம்பவே பக்குவப்பட்டு நிதானமாக யோசித்து முடிவு எடுத்திருக்கிறார் என்பது போல் தெரிகிறது.

அந்த வகையில் இப்போதைக்கு பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தலாம் என்று மும்பையில் தங்கி இருப்பது போல் கூறியிருக்கிறார். அதே நேரத்தில் இங்கே நல்ல படங்களும் இயக்குனர்களும் தேடி வந்தால் அதிலும் நான் கவனம் செலுத்துவேன் என்று கூறியிருக்கிறார். அதே மாதிரி ஜெயம் ரவிக்கு தற்போது வந்த ஆசை என்னவென்றால் ஜெனிலியா கூட நடிக்க வேண்டும் என்பதுதான்.

ஏற்கனவே இவர்கள் நடித்த சந்தோஷ் சுப்பிரமணியன் படம் சூப்பர் ஹிட் ஆகி பல குடும்பங்களின் பேவரைட் படமாக இருக்கிறது. அந்த வகையில் ஜெயம் ரவி தற்போது மனம் வெறுத்துப் போன நிலையில் இப்படிப்பட்ட ஒரு கேரக்டருடன் இணைந்து நடந்தால் எனக்கு அதைவிட வேறு சந்தோசம் இருக்க முடியாது என்று அவருடைய ஆசையை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் இப்பொழுது வரை ஜெனிலியா மற்றும் ஸ்ரேயா உடன் நட்பு ரீதியாக பேசிக்கொண்டு இருக்கிறோம். அந்த வகையில் எங்களுக்கான ஒரு கதை இருந்தால் நிச்சயம் நாங்கள் ஒன்றாக நடிக்க தயார் என்பதை கூறியிருக்கிறார். இந்த பேட்டியை பார்க்கும் இயக்குனர்களில் யாராவது ஒருவர் அப்படி ஒரு கதை இருந்தால் தாராளமாக எங்களிடம் சொல்லலாம். நாங்கள் நடிப்பதற்கு தயாராக இருக்கிறோம் என்று அவருடைய ஆசையை கூறி இருக்கிறார்.

Trending News