வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கோமாளி படத்தின் முதல் சாய்ஸ் ஜெயம் ரவி இல்ல.. வெற்றிக்குப்பின் பிரதீப் வெளியிட்ட ரகசியம்

ஜெயம் ரவி இயக்கத்தில் கடந்த 2019 ம் ஆண்டு வெளிவந்த கோமாளி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தின் மூலம்தான் பிரதீப் ரங்கநாதன் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்று விட்டார்.

வெளியான சில வாரங்களிலேயே பல கோடிகளை வாரி குவித்திருக்கும் இந்த படத்தின் மூலம் அவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தையும் பெற்றிருக்கிறார். இந்நிலையில் இவர் இயக்கத்தில் வெளிவந்த கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு முன் எந்த நடிகர் நடிக்க இருந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Also read: சூப்பர் ஹிட் டைரக்டருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.. தொடர்ந்து அலைக்கழிக்கும் விஷால், கார்த்தி, ஜெயம் ரவி

அதாவது பிரதீப் அந்த சமயத்தில் கோமாளி படத்தின் கதையை பல ஹீரோக்களுக்கு கூறியிருக்கிறார். அதில் நடிகர் பிரபுதேவா இந்த கதையை கேட்டு பிடித்து போய் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆனால் நடிக்க ஓகே சொன்ன அவர் கால்ஷூட் தராமல் இழுத்தடித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.

ஏனென்றால் அவர் அந்த சமயத்தில் தேவி 2 உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்தார். அது மட்டுமல்லாமல் ஒரு ஹிந்தி திரைப்படத்தை இயக்கும் முயற்சியிலும் அவர் இருந்தார். அந்த பிசியான வேலைகளால் பிரதீப் கேட்ட தேதிகளை அவரால் கொடுக்க முடியாமல் போனது.

Also read: குடும்பமாக தீபாவளியை கொண்டாடிய 5 சினிமா பிரபலங்கள்.. கேப்டன் முதல் ஜெயம் ரவி வரை

அதன் பிறகு நேரத்தை வீணடிக்க விரும்பாத பிரதீப் உடனடியாக ஜெயம் ரவியை சந்தித்து இந்த பட கதையை கூறியிருக்கிறார். அப்போது சில தோல்வி படங்களால் சேர்ந்து போயிருந்த ஜெயம் ரவி இந்த படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார். இப்படி உருவானது தான் இந்த கோமாளி திரைப்படம்.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 50 கோடி வரை வசூல் லாபம் பார்த்தது. இந்தப் படத்தால் ஜெயம் ரவிக்கும் நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் பிரபுதேவா தான் கைக்கு வந்த இந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டார்.

Also read: பொன்னியின் செல்வனால் கொடி பறக்கும் ஜெயம் ரவியின் கேரியர்.. செகண்ட் இன்னிங்ஸ்க்கு ரொம்பிய சூட்கேஸ்

Trending News