Jayam Ravi: திரை உலகில் இப்போது அடுத்தடுத்த விவாகரத்து செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. தனுஷ், ஐஸ்வர்யா பிரிந்தது முதல் அமலாபால், சமந்தா என ஒவ்வொருவரும் திருமணமான வேகத்திலேயே விவாகரத்து முடிவுக்கு வந்தனர்.
அதைத்தொடர்ந்து சமீபத்தில் ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவரின் விவாகரத்தில் செய்தி கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது பல விமர்சனங்களை கடந்த நிலையில் தற்போது ஜெயம் ரவி தன் மனைவியை விவாகரத்து செய்யப் போகிறார் என்ற செய்தி காட்டு தீ போல் பரவிக் கொண்டிருக்கிறது.
விவாகரத்து வதந்தி
நேற்றில் இருந்தே இந்த செய்தி வைரலான நிலையில் அவருடைய ரசிகர்கள் இது நிஜமாக இருக்கக் கூடாது என கூறி வந்தனர். இந்த சூழலில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ஒரு போஸ்ட் மூலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அதாவது ஜெயம் படம் வெளியாகி 21 ஆண்டுகள் கடந்ததை அடுத்து அப்பட போஸ்டரை அவர் தன் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் காதல் என்னும் வார்த்தை அது வார்த்தை இல்ல வாழ்க்கை என்ற பாடலின் வரிகளையும் பகிர்ந்து உள்ளார்.
இதன் மூலம் தங்களுடைய காதல் எவ்வளவு ஆழமானது என்பதையும் அவர் சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இதற்கு முன்பு கூட ஜெயம் ரவி விவாகரத்து செய்யப் போகிறார் என்ற செய்தி கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால் ஜெயம் ரவி அதற்கான விளக்கத்தை கொடுக்காமல் மனைவி குழந்தைகளுடன் இருக்கும் போட்டோவை மீடியாவில் போட்டு முற்றுப்புள்ளி வைத்து விடுவார். அதே போன்றுதான் இப்போது ஆர்த்தியும் ஒரே போஸ்ட் மூலம் சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
விவாகரத்து சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்த ஆர்த்தி ஜெயம் ரவி
- ஜெயம் ரவி லைன் அப்பில் இருக்கும் 5 படங்கள்
- ஜெயம் ரவி நிலைமையை நம்பி அவ்வளவு கோடிகள் போட முடியாது
- ஜெயம் ரவி ஈகோவை சீண்டிய மணிரத்தினம்