திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வந்த ஸ்பீடுக்கு அதல பாதாளத்திற்கு செல்லும் ஜெயம் ரவி.. பணத்தாசையால் பறிபோக இருக்கும் மார்க்கெட்

Actor Jayam Ravi: ஜெயம் ரவியின் வெற்றி மேலும், கீழும் ஆக தான் தாவிக்கொண்டே வருகிறது. ஒரு படத்தின் மூலம் வெற்றி அடைந்தால் அடுத்த படம் படுதோல்வியாக மாறுகிறது. இதற்கிடையில் இவருக்கு அதிகமாக ஹிட் படத்தை கொடுத்து தூக்கி விட்டவர் இவருடைய அண்ணன் மோகன் ராஜா. இவரை தவிர மற்ற இயக்குனர்களிடம் படம் நடித்தால் ஏதோ சுமாரான வரவேற்பு கிடைக்கிறது.

இதை தகர்த்தெறியும் வகையில் அமைந்த படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. இதனை தொடர்ந்து இவருடைய மார்க்கெட் உயர்ந்து விட்டது. அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு தயாரிப்பாளரிடம் உங்களுடன் மூன்று படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லி அதற்கான அட்வான்ஸ் தொகையும் வாங்கி இருக்கிறார்.

Also read: மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் பரத்.. ஜெயம் ரவியால் கேரியர் போச்சு என புலம்பல்

இப்படி இவர் வாங்கிய பணத்தை வைத்து போயஸ் கார்டனில் வீடு வாங்க பயன்படுத்தி இருக்கிறார். அடுத்ததாக அந்த தயாரிப்பாளர்கள் இவரை படம் நடிக்க கூப்பிட்டால் அவர்களை கண்டு கொள்ளாமல் கழட்டி விடுகிறார். ஆனால் அதற்கு பதிலாக வேறு படங்களில் மற்ற தயாரிப்பாளர்களுடன் நடித்து வருகிறார்.

இதனால் அந்த தயாரிப்பாளர் ஜெயம் ரவி மீது புகார் கொடுக்க இருக்கிறாராம். தற்போது தான் இவருடைய மார்க்கெட் ரேட் உயர்ந்து வருகிறது. அதற்குள் பணத்த ஆசையால் தன் பெயரை தானே கெடுக்கும் விதமாக சில விஷயங்களை அல்பத்தனமாக செய்து வருகிறார்.

Also read: தொடர்ந்து மூன்று ஹிட் கொடுத்த 5 சக்ஸஸ்ஃபுல் நடிகர்கள்.. பெயரை உடைத்து வெற்றி கண்ட ஜெயம் ரவி

இதனால் இவருடைய பெயர் மட்டும் அல்லாமல் மொத்த மார்க்கெட்டும் குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அது இவருக்கு நன்றாகவே தெரிந்தும் ஏன் இந்த பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. வந்த ஸ்பீடுக்கு இவருடைய மார்க்கெட் ரேட் அதிகரிக்காமல் அதால பாதாளத்திற்குள் செல்ல போகிறது என்பது வருத்தமாக இருக்கிறது.

இந்த விஷயத்தில் அசிங்கம் ஏற்பட்டால் இதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினமானது. கூடிய சீக்கிரத்தில் இந்த பிரச்சினையை சரி செய்து மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டால் இவருடைய கேரியர் மென்மேலும் வளருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அத்துடன் இதுவரை இவரை பற்றி எந்த ஒரு வதந்திகளும் வராத நிலையில் இந்த ஒரு பிரச்சனை பூதாகரமாக வெடிக்கப் போகிறது.

Also read: எட்டு ஆண்டுகளில் தன்னோடு சேர்த்த 6 இயக்குனர்களையும் வளர்த்துவிட்ட ஜெயம் ரவி.. இந்த நல்ல மனசு யாருக்கு வரும்.!

Trending News