வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

பூமி பட தோல்வியால் விட்டதைப் பிடிக்க துடிக்கும் ஜெயம் ரவி.. அதிரடியாக வெளிவந்த அப்டேட்

கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பு கிடைக்காததால், விட்டதைப் பிடிக்கும் நோக்கத்தில் ஜெயம் ரவி தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கும் அடுத்த படத்தை மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதனின் உதவி இயக்குனரான கல்யாண் இயக்கி கொண்டிருக்கிறார்.

இவர் ஏற்கனவே ஜெயம் ரவியின் பூலோகம் படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படம் ஜெயம் ரவிக்கு 28-வது படம் ஆகும். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஸ்கிரீன் சின் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் ஜெயம்ரவியின் 28-வது படத்திற்கு விவேக் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி. எஸ் இசையமைக்கிறார். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் இறுதிக் கட்டத்திற்கான படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் காட்சிப்படுத்தப்பட உள்ள நிலையில், விரைவில் ஜெயம்ரவியின் 28-வது படத்தின் ரிலீஸ் தேதி வெளியாக உள்ளது. மேலும் படப்பிடிப்புத் தளத்தில் ஸ்டைலான கெட்டப்பில் வலம்வரும் ஜெயம்ரவியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.

jayam-ravi-28th-flim
jayam-ravi-28th-flim

இதில் ஜெயம் ரவி தாடியுடன் ஹாண்ட்சமாக உள்ளார். இன்னிலையில் பூலோகம் படத்தை போன்றே விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஜெயம் ரவியின் 28-வது படத்தின் வருகைக்காக ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

எனவே சில வருடங்களாக ஓரளவு வெற்றியை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் ஜெயம்ரவிக்கு, இரண்டாவது முறையாக மீண்டும் கல்யாணுடன் கூட்டு சேர்ந்த ஜெயம் ரவிக்கு இந்தப் படமாகவது வெற்றிப் படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News