ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

ஜெயம் ரவிக்கு சைரன் கை கொடுத்ததா, காலை வாரி விட்டதா.? முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்

Siren First Day Collection : புதுமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் தான் சைரன். கடந்த சில வருடங்களாகவே ஜெயம் ரவிக்கு பெரிய அளவில் வெற்றி கொடுத்த படம் என்றால் எதுவும் இல்லை.

பொன்னியின் செல்வன் படம் வெற்றி பெற்றாலும் அது ஜெயம் ரவி படம் மட்டும் என்று சொல்லிவிட முடியாது. இந்நிலையில் அவர் பெரிதும் நம்பி இருந்த படம் தான் சைரன். ஜெயம் ரவி நினைத்தது போல சைரன் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் கிடைத்து வருகிறது.

ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்த ஜெயம் ரவி செய்யாத குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கிறார். பின்பு பரோலில் வெளியே வர வாய்ப்பு கிடைத்த நிலையில் இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்களை பழி வாங்குகிறார். போலீஸ் அதிகாரியான கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து நடக்கும் குற்றங்களுக்கு யார் காரணம் என்பதை கண்டறிய முற்படுகிறார்.

Also Read : Siren Movie Review – ஆடு புலி ஆட்டம் ஆடும் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ்.. சைரன் முழு விமர்சனம்

மேலும் சைரன் படம் ரசிகர்களிடம் ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறது. அதோடுமட்டுமல்லாமல் அப்பா, மகள் இடையே உள்ள காட்சிகளும் பெரிய அளவில் வரவேற்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சைரன் படம் கிட்டத்தட்ட 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. முதல் நாளில் 1.40 கோடி வசூல் செய்திருக்கிறது.

மேலும் தொடர்ந்து படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால் வரும் நாட்களில் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் சைரன் படம் ஜெயம் ரவிக்கு கை கொடுத்து தான் உள்ளது. குறிப்பாக ஜெயம் ரவியை காட்டிலும் கீர்த்தி சுரேஷுக்கு அதிக ஸ்கோப் இருந்துள்ளது.

Also Read : ஜெயம் ரவியை தாங்கி பிடிக்குமா சைரன்.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

Trending News