புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷின் ஆடு புலி ஆட்டம்.. சைரன் ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

Siren Trailer: ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் சைரன் படம் உருவாகி இருக்கிறது. வரும் 16ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கும் ஜெயம் ரவியின் மேல் கொலைபழி விழுகிறது. அதிலிருந்து தன்னை நிரூபிக்க அவர் வருட கணக்கில் போராடுவது போல் ட்ரெய்லர் அமைந்துள்ளது. இதில் ஜெயம் ரவி வயதான கெட்டப்பில் வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது.

Also read: ரஜினிக்கு பெரிய கும்பிடு போட்டு எஸ்கேப் ஆன ஜெயம் ரவி.. 2 தோல்வியால் துவண்டு போன துருவன்

அவருடைய மனைவியாக வரும் அனுபமா பரமேஸ்வரன், போலீசாக வரும் கீர்த்தி சுரேஷ், யோகி பாபு என அனைவரின் கதாபாத்திரங்களும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. இதில் ஜெயம் ரவியின் மகள் அவரை கொலைகாரன் என வெறுக்கும் காட்சிகள் காட்டப்படுகிறது.

அதேபோல் கீர்த்தி சுரேஷ் ஜெயம் ரவியை கொலைகாரன் என நிரூபிக்க போராடுகிறார். இதிலிருந்து அவர்தான் ஜெயம் ரவியின் மகள் என்பது தெரிகிறது. இப்படி இருவரும் ஆடும் ஆடுபுலி ஆட்டமாக ட்ரெய்லர் முழுவதும் விறுவிறுப்பும் செண்டிமெண்ட்டும் கலந்து நகர்கிறது.

Also read: பொன்னியின் செல்வனுக்கு வந்த சோதனை..! மணிரத்தினத்திடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஜெயம் ரவி

சமீப காலமாக தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜெயம் ரவி இதில் தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்துள்ளார். அந்த அளவுக்கு ட்ரெய்லர் முழுவதும் அவர் ஆக்கிரமித்து இருக்கிறார். இப்படியாக வெளிவந்துள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Trending News