Jayam Ravi: ஜெயம் ரவி நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் சைரன் படம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அப்படம் போகவில்லை. அதை எடுத்து தக் லைஃப் படத்திலிருந்தும் அவர் வெளியேறினார்.
இதற்கு சிம்பு ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும் தேதிகள் இல்லை என்பது தான் முக்கிய பிரச்சனையாக இருந்திருக்கிறது. அந்த அளவுக்கு ஜெயம் ரவி கைவசம் பல படங்கள் இருக்கிறது. அதை பற்றி இங்கு காண்போம்.
தற்போது ஜெயம் ரவி சிவா மனசுல சக்தி புகழ் எம் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். முழு நீள காமெடி படமாக உருவாகும் இந்த பிரதர் நிச்சயம் ஜெயம் ரவிக்கு வெற்றி படமாக அமையும்.
Brother
Genie
Kadhalikka Neramillai
Thani Orvan 2
இதற்கு அடுத்து பேண்டஸி முறையில் உருவாகும் ஜீனி படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி செட்டி, கல்யாணி பிரியதர்ஷன், தேவயானி என பலர் நடிக்கின்றனர்.
ஜெயம் ரவியின் லைன் அப்
இதன் போஸ்டரே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் படத்தின் பட்ஜெட் 100 கோடி என்பதும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அடுத்ததாக கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை உருவாகிறது.
முழுக்க முழுக்க காதல் ரொமான்ஸ் கலந்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்திற்கும் எதிர்பார்ப்பு உள்ளது. இதை அடுத்த மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 அறிவிப்பு வெளியானது.
Jayam Ravi
M.Rajesh
Kiruthiga Uthayanithi
Mogan Raja
Pandiraj
ஆனால் இப்படம் சிறிது காலதாமதமாக தொடங்கப்பட இருக்கிறது. அதற்குள் ஜெயம் ரவி மற்ற ப்ராஜெக்ட்டுகளை முடித்து விடுவார். மேலும் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்திலும் ஜெயம் ரவி நடிக்க கமிட் ஆகி உள்ளார்.
இப்படம் நம்ம வீட்டு பிள்ளை போன்று குடும்ப உறவுகளை மையப்படுத்தி இருக்குமாம். இப்படி இந்த ஐந்து படங்களும் ஜெயம் ரவி வசம் இருக்கும் நிலையில் அனைத்துமே எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.
பிஸியாக நடித்து வரும் ஜெயம் ரவி
- ஜெயம் ரவிக்கு பதிலாக தக் லைஃப்பில் களமிறங்கும் ஹீரோ
- ஜெயம் ரவி நிலைமையை நம்பி அவ்வளவு கோடிகள் போட முடியாது
- ஜெயம் ரவி ஈகோவை சீண்டிய மணிரத்தினம்