சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

Siren Movie Review – ஆடு புலி ஆட்டம் ஆடும் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ்.. சைரன் முழு விமர்சனம்

Siren Movie Review : ஜெயம் ரவி தொடர்ந்து புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வரும் நிலையில் இப்போது புதுமுக இயக்குனர் அந்தோனி பாக்கியராஜ் இயக்கத்தில் சைரன் படத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கீர்த்தி சுரேஷ் என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

இதுதவிர யோகி பாபு, சமுத்திரக்கனி போன்ற பிரபலங்களும் நடித்து இருக்கின்றனர். செய்யாத குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்துவிட்டு பரோலில் இருந்து வெளியே வரும் திலகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி.

அவருடைய மனைவியாக காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும் போலீஸ் அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். பரோலில் இருந்து வெளிவரும் ஜெயம் ரவி ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ள நிலையில் தன்னை இந்த நிலைமைக்கு உள்ளாக்கிய வரை பழிவாங்குகிறார்.

Also Read : ஜெயம் ரவியை தாங்கி பிடிக்குமா சைரன்.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

மேலும் இந்த குற்றம் சம்பவங்களுக்கு ஜெயம் ரவி தான் காரணமா என்று சந்தேகப்படும் கீர்த்தி சுரேஷ் அவரை சாட்சியங்களுடன் பிடிக்கிறாரா என்பது தான் சைரன் படம். படத்தில் முக்கால்வாசி காட்சிகளில் ஜெயம் ரவி வயதான கதாபாத்திரத்தில் தான் வருகிறார்.

பிளாஷ்பேக் காட்சிகளில் அனுபமா பரமேஸ்வரர் உடன் ரொமான்ஸ் காட்சிகளை இளமையாக இருக்கிறார். மேலும் 14 வருடங்கள் செய்யாத குற்றத்திற்காக மனைவி மற்றும் மகளை பிரிந்து தனது வாழ்க்கையை தொலைத்த ஒருவரின் பழிவாங்குதல் அவருடைய பார்வையில் இருந்து சரியாக தான் இருக்கிறது.

மேலும் மகள் மற்றும் தந்தை இடையே பாசப்பிணைப்பு படத்திற்கு கூடுதல் பிளஸாக அமைந்திருக்கிறது. படத்திற்கு மைனஸ் பாயிண்ட் என்றால் முன்னணி இசை மற்றும் பாடல் சற்று கை கொடுக்கவில்லை. மறுபடியும் ஜெயம் ரவிக்கு கண்டிப்பாக சைரன் படம் வெற்றியை கொடுக்க உள்ளது.

சினிமாபேட்டை ரேட்டிங் : 3/5

Also Read : சைரனை ஜெயம் ரவி மட்டும் நம்பி இல்ல.. 8 வருடத்திற்கு பின் ரீ என்ட்ரி கொடுக்கும் ஹீரோயின்

Trending News