வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயராமனின் கதாபாத்திரம்.. கனகச்சிதமாக தேர்வு செய்த மணிரத்னம்

சோழ வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பொன்னியின் செல்வன் நாவலை பல ஆயிரக்கணக்கான வாசகர்கள் படித்துள்ளனர். மேலும் இந்த நாவலைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து இருக்கும். அதுமட்டுமல்லாமல் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தின் மீது அதீத ஈடுபாடும் இருந்திருக்கும்.

இந்நிலையில் தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் கதாபாத்திரங்களுக்கு ஒவ்வொரு நடிகர், நடிகைகளையும் அதற்கு ஏற்றார் போல் பார்த்து பார்த்து தேர்வு செய்துள்ளார் இயக்குனர். இப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கான சரியான நடிகர்களை தேர்வு செய்துள்ளார்.

இதில் மலையாள நடிகர் ஜெயராமனும் நடித்துள்ளார். அண்மையில் இவர் தனது படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதாவது ஜெயராமன் பொன்னியின் செல்வன் படத்தில் திருமலையப்பன் ஆழ்வார்க்கடியான் நம்பி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

திருமலை என இயற்பெயர் கொண்ட இவர் ஆழ்வார்களின் மீதுள்ள பற்று காரணமாக ஆழ்வார்க்கடியான் நம்பி என்ற பெயரை மாற்றிக் கொண்டார். எதுவாக இருந்தாலும் நிதானமாக செயல்பட கூடிய கதாபாத்திரம். இவர் பொன்னியின் செல்வன் நாவல் படி சோழப் பேரரசின் முதல்-மந்திரி அநிருத்தப் பிரமராயரின் ஒற்றன் அவார்.

மேலும் இந்த நாவலில் இளவரசி நந்தினி தேவியை வளர்த்த சகோதரராகவும் இவர் சித்தரிக்கப்படுகிறார். இவர் உடல் முழுவதும் நாமம் இட்டுக்கொண்டு எப்போதும் கையில் தடியுடன் இருப்பார். இந்த நாவலைப் படித்த அனைவருக்கும் இவரது கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் நன்கு அறிந்திருக்கக் கூடும்.

ஆரம்பத்தில் அப்பாவியான நகைச்சுவை கலந்த நம்பி கதாபாத்திரம் இறுதியில் எதிர்பாராத திருப்பமாக அமைந்திருக்கும். மேலும் நகைச்சுவை ததும்ப பேசுவதிலும், அறிவுப்பூர்வமான ஆலோசனைகள் சொல்வதிலும் ஆழ்வார்க்கடியான் நம்பி வல்லவர். இதனை சரியாக புரிந்து கொண்டு மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயராமனை சரியாக தேர்வு செய்துள்ளார்.

Trending News