நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான ‘Black’ படம் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக இருந்தவர், சமீப காலமாக தொடர் தோல்வி படங்களை கொடுத்து பின்னுக்கு சென்றிருந்தார். ஒரு கம் பாக் கொடுக்க போராடிக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், இப்போது விட்டால், எப்போதும் பிடிக்க முடியாது என்று எண்ணி, நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கியிருக்கிறார் ஜீவா. தற்போது அவர் ‘Black’ எனும் படத்தில் நடித்து, நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறார்.
ஹாலிவுட் படங்களான ‘coherence’, ‘vivarium’ போன்ற படங்களை தழுவி, Science Fiction படமாக இந்த படத்தை உருவாக்கினார் இயக்குனர், கேஜி பாலசுப்ரமணியம். வேட்டையன் படத்தோடு ஒரு படம் வெளியாகும்போது, அது கண்டிப்பாக தரமான படமாக இருந்தால் மட்டுமே ரேஸில் முந்தமுடியும்.
திரைகள் அதிகரிப்பு?
வேட்டையன் நன்றாக ஓடுகிறது இருந்தாலும் முதல் வாரம் அளவு தொடர்வது கடினம். வேட்டையன் படத்திற்கு முதலில் கொடுக்கபட்ட திரை தற்போது கம்மியாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், Black திரைப்படத்துக்கு, மக்களிடம் கிட்டிய வரவேற்பை பார்த்து, கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டிருக்கு. சொல்ல போனால், இந்த பேரிடர் காலத்திலும், House Full-ஆக ஓடிக்கொண்டிருக்கிறது.
தலைவர் படத்துக்கே, ஒரு படம் Tough கொடுக்குதே என்ற ஆச்சரியத்திலும் பலர் தற்போது Black படத்தை பார்க்க முன்வருகின்றனர். இதற்கு இன்னொரு ஒரு முக்கிய காரணம், science fiction படமாக இருந்தாலும், மக்களை குழப்பாமல், நம் மக்களுக்கு புரியும் விதத்தில் விறுவிறுப்பாக எடுத்தது தான்.
பொதுவாக பிரியா பவானி ஷங்கர் மற்றும் ஜீவா, இருவர் மீதும் வைக்க கூடிய ஒரு விமர்சனம், இவர்கள் நடித்தால் படம் ஓடாது என்பது தான். ஆனால் அதை தற்போது பிரேக் செய்து முன்னேறி வருகின்றனர்.