Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினி போட்ட பிளான்படி ஜீவாவிடம் இருந்து 30 லட்சம் ரூபாயை கைப்பற்றி விட்டார். ஆனால் இந்த விஷயம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வேண்டாம் என்று மனோஜிடம் சொல்லிவிட்டார். இந்த பணத்தை வைத்து நாம் பிசினஸ் பண்ணி கோடீஸ்வரராக ஆகிவிடலாம் என்று மனோஜ் நினைப்பில் ஆசையைக் காட்டி விட்டார் ரோகினி.
அதன்படி மனோஜ் ரோகினி சொன்ன அனைத்து விஷயத்திற்கும் தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையாட்டி விட்டார். அடுத்து வீட்டிற்கு வந்த ரோகினி மனோஜம் கைநிறைய புது டிரஸ்களை வாங்கிட்டு வந்து அண்ணாமலை மற்றும் விஜயாவிற்கு கொடுக்கிறார்கள். அதாவது என்னுடைய அப்பா மனோஜ் பிசினஸ் பண்ண வேண்டும் என்பதற்காக 15 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறார் என்று சொல்கிறார்.
உடனே முத்து அவர்தான் ஜெயிலில் இருக்கிறாரே எப்படி அனுப்பினார் என்று கேள்வி கேட்கிறார். அதற்கு ரோகிணி அவருக்குத் தெரிந்த நண்பர் மூலம் மாமாவுக்கு அனுப்பினார் என்று சொல்லி சமாளித்து விடுகிறார். அத்துடன் தற்போது 15 லட்ச ரூபாயை அனுப்பி விட்டு வியாபாரத்தை தொடங்க சொல்லி இருக்கிறார்.
அதன் பிறகு மறுபடியும் மாமா மூலம் 15 லட்சம் ரூபாய் அனுப்பி விடுகிறேன் என்று கூறியிருக்கிறார் என பொய் மேல் பொய் சொல்லி வீட்டில் இருப்பவர்களை நம்ப வைத்து விடுகிறார். இதை கேட்ட முத்து இதெல்லாம் நம்பற மாதிரியே இல்லை என்று சொல்கிறார்.
கையும் களவுமாய் சிக்கப் போகும் ரோகிணி
உடனே முத்து எங்க அப்பாவிடம் இருந்து பணத்தை திருடிட்டு போன மனோஜ் கையில இப்போ இருக்க 15 லட்ச ரூபாயை எங்க அப்பாவிடம் திருப்பிக் கொடுத்து விட சொல்லு என்று சொல்கிறார். உடனே அண்ணாமலை இது ரோகினியின் அப்பா பணம். அது நம்மளுக்கு தேவையில்லை என்று வேண்டாம் என மறுக்கிறார். இதை கேட்டதும் விஜயா ரொம்பவே சந்தோஷத்தில் குஷி ஆகிவிட்டார்.
இதனை தொடர்ந்து அடுத்து வரப்போகிறது என்னவென்றால் ஜீவா, கனடா போவதற்காக முத்துவுக்கு போன் பண்ணி ட்ராப் பண்ணுவதற்கு கூப்பிடுகிறார். முத்துவும் ஜீவாவை கூட்டிட்டு ஏர்போர்ட்டில் விடப் போகிறார். அங்கே இறங்கியதும் ஜீவா என்னிடம் கையில் பணம் இல்லை நான் GPay பண்ணி விடுகிறேன் என்று முத்துவுக்கு GPay பண்ணுகிறார்.
ஆனால் முத்து அக்கவுண்டில் ஏதோ பிரச்சனை இருப்பதால் பணம் ட்ரான்ஸ்பர் ஆகாமல் போய்விட்டது. உடனே வேறு யாராவது தெரிஞ்சவங்க அக்கவுண்ட் நம்பர் இருந்தால் சொல்லுங்கள். நான் அவர்களுக்கு அனுப்பி விடுகிறேன் என்று ஜீவா சொல்கிறார். உடனே முத்து, மனோஜ்க்கு போன் பண்ணி அக்கவுண்ட் நம்பரை கேட்க போகிறார்.
மனோஜும் அவருடைய அக்கவுண்ட் நம்பரை முத்துக்கு அனுப்ப போகிறார். இதை முத்து ஜீவாக்கு அனுப்பியதும் ஜீவாக்கு அனைத்து உண்மைகளும் தெரிந்து விடும். இதன் மூலம் இந்தியாவிற்கு வந்த பொழுது அவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விட்டேன் என்ற உண்மை ஜீவா மூலம் முத்துக்கு தெரிய வர வாய்ப்பு இருக்கிறது.
அப்படி மட்டும் முத்துவுக்கு தெரிந்து விட்டால் ரோகிணியின் ஒட்டுமொத்த ஆட்டத்திற்கும் முடிவு கிடைத்துவிடும். அதாவது ஏற்கனவே பல பொய்களை சொல்லி குடும்பத்தில் நல்லவர் போல் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட ரோகினிக்கு அண்ணாமலை பணம் திரும்ப கிடைத்துவிட்டது. ஆனாலும் அதை வீட்டில் சொல்லாமல் அப்பா அனுப்பியது என்று பொய் பித்தலாட்டம் பண்ணியது வெட்ட வெளிச்சம் ஆகிவிடும்.
இதன் மூலம் ரோகினிக்கு மிகப்பெரிய ஆப்பு வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதன் படி கதை நகர்ந்தால் மட்டுமே பார்ப்பவர்களின் சுவாரசியம் இன்னும் அதிகரிக்கும். அத்துடன் விஜயா கையில் மாட்டிக்கொண்டு ரோகிணி சிக்கி சின்னா பின்னமாக ஆகப் போகிறார். இதெல்லாம் ஜீவா, ஏர்போர்ட்டில் வைத்து சொல்லப் போகும் உண்மையில் தான் அடங்கி இருக்கிறது.