சனிக்கிழமை, பிப்ரவரி 22, 2025

மார்க்கெட் இல்லாத ஜீவாவுக்கு கோடிகளை இறக்கும் தயாரிப்பாளர்.. மெகா பட்ஜெட்டில் சேவர் கொடி செந்தில்

கோ, என்றென்றும் புன்னகை என்று ஜீவாவின் ஹிட் படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். நல்ல திறமைகள் இருந்தும் சரியான கதையை தேர்வு செய்யாமல் கோட்டை விடுகிறார். இவரை வைத்து பெரிய பட்ஜெட் படங்கள் எடுப்பது ரிஸ்க்

கே வி ஆனந்த் இயக்கிய கோ படம் தான் ஜீவா நடிப்பில் வெளிவந்த பெரிய பட்ஜெட் படம். அது கிட்டத்தட்ட 20 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ளனர். அந்த படத்திற்கு ஸ்ட்ராங்கான கன்டென்ட் இருந்ததால் அப்பொழுது துணிந்த ரிஸ்க் எடுக்கப்பட்டது.

இப்பொழுது ஜீவாவின் மார்க்கெட் டல்லாக உள்ளது இருந்தபோதிலும் அவரை வைத்து ஐசரி கணேஷ் 35 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்துள்ளார். ஜீவாவின் நடிப்பில் அகத்தியன் என்ற படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்திற்கு தான் அவ்வளவு பெரிய பட்ஜெட்டை இறக்கி உள்ளது வேல்ஸ் நிறுவனம்.

பா விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் அர்ஜுன், ராசி கண்ணா, ராதாரவி, அழகம்பெருமாள் யோகி பாபு போன்றவர்கள் நடித்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு பா விஜய் இந்த படத்திற்கு அடித்தளம் போட்டார். அதன் பின் தயாரிப்பாளர்கள் இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர் 2023 ஆம் ஆண்டு மீண்டும் இந்த ப்ராஜெக்ட்டை கையில் எடுத்தார். அப்பொழுது வேல்ஸ் நிறுவனம் இதை தயாரிக்க முன் வந்தது. வெற்றிகரமாக முடிக்கப்பட்ட இந்த படம் இந்த மாதம் 28ஆம் தேதி வெளிவர இருக்கிறது. படம் அடுத்த பாகுபலி போல் இருக்கும் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நம்பிக்கை வைத்துள்ளார்.

Trending News