வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்படும் ஜீவா.. சீரியலா இருந்தாலும் கொஞ்சமாவது லாஜிக் வேண்டாமா?

Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எப்போது முடிவடையும் என்று ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். அந்த அளவிற்கு கடந்த இரண்டு வருடங்களாக கதையை இல்லாமல் உருட்டி விட்டார்கள். அந்த வகையில் தற்போது அனைவரும் எதிர்பார்த்தபடி புது வீட்டிற்கு கிரகப்பிரவேசத்திற்கு வந்து விட்டார்கள்.

ஆனால் அங்கே ஆச்சரியமாக, வீட்டிற்கு தனத்தின் பெயரை வைத்திருக்கிறார்கள். என்னதான் மற்றவர்களுக்கு எந்த வித ஆட்சப்பனையும் இல்லை என்றாலும் மனதிற்குள் அவர்களுக்கும் வருத்தம் இருக்க தான் செய்யும். இத்தனை நாளாக தியாகி மாறி இருந்துவிட்டு கடைசியில் கமுக்கமாக காரியத்தை சாதித்து விட்டார்.

Also read: டிஆர்பியில் மங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. ஒரே கதையே வச்சு உருட்டினா இப்படிதான்

அதாவது கடைக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் தன்னுடைய மகனுக்கு பாண்டியன் என்ற பெயரையும், வீட்டிற்கு தனலட்சுமி என்ற பெயரையும் வைத்து அனைத்துக்கும் சொந்தக்காரர்கள் நாங்கள்தான் என்று சொல்லும்படியாக வைத்து விட்டார் கெட்டிக்கார மூர்த்தி. இதெல்லாம் ஒன்னும் புரியாமல் முட்டாளாக இருக்கிறார்கள் அந்த வீட்டில் உள்ள மருமகள்கள் தம்பிகள்.

என்னதான் சீரியலாக இருந்தாலும் கொஞ்சமாக லாஜிக் வேண்டாமா?. அதற்கு ஏற்ற மாதிரி மீனாவின் அப்பா கேட்ட கேள்வி சரியாகத்தான் இருக்கிறது. நீ எங்க இருக்குன்னு கேட்டா தனலட்சுமி வீட்லயா இருக்கேன் சொல்லுவ என்று கேட்ட கேள்வி சரியாகத்தான் இருக்கிறது. அத்துடன் முல்லையின் அம்மாவுக்கும் மிகப்பெரிய வருத்தமாகவும் இருக்கிறது, ஆத்திரமும் வருகிறது.

Also read: குணசேகரனை முட்டாளாக்கிய அப்பத்தா.. ஜீவானந்தத்தின் குடும்பத்தை சுக்குநூறாக நொறுக்கிய கதிர்

அதை ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அனைவரிடமும் காட்டுகிறார். இதனைத் தொடர்ந்து பூஜையில் இருந்து சடங்குகளை செய்யும் விஷயத்தில் கூட தனம் மற்றும் மூர்த்தி இவர்கள் இருவரும் மட்டும் இருந்து அனைத்து விஷயங்களையும் செய்கிறார்கள். இதை பார்ப்பதற்கு யாருக்குமே ஒத்துப் போகாது. எல்லாத்திலேயும் முந்திரிக்கொட்டை மாதிரி முந்திரதே இந்த தனத்துக்கு வேலையா போச்சு.

இதனைத் தொடர்ந்து அடுத்த பிரச்சனையாக ஜீவா மற்றும் சகலைக்கு பிரச்சனை ஆரம்பமாகிறது. இதில் தம்பி அவமானப்படுகிறார் என்று தெரிந்ததும் மூர்த்தி கொந்தளித்து ஜீவாவின் சகலை சட்டையை பிடித்து அடிக்க போகிறார். இதனால் அங்கே பிரச்சனை பூகம்பமாக வெடிக்கப் போகிறது. இதற்கும் ஜனார்த்தன் இளைய மருமகனுக்கு தான் சப்போர்ட் செய்யப் போகிறார். இதனால் அவமானத்தில் தலை குனிந்து அண்ணன் வீட்டிலேயே தஞ்சமடைய போகிறார் ஜீவா.

Also read: கதையே இல்லாமல் உருட்டினால் இப்படித்தான் டிஆர்பி கம்மியாகும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு ஒரு எண்டு கார்டு இல்லையா!

Trending News