செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

ஜீவன் பிறப்பிலேயே கோடீஸ்வரராமே.. வெளிவந்த தெரியாத பல உண்மைகள்

நான் அவனில்லை, திருட்டுப்பயலே போன்ற படங்களின் மூலம் ஹீரோவாக அறியப்பட்ட ஜீவன் காக்க காக்க போன்ற படங்களில் கொடூர வில்லனாகவும் நடித்துள்ளார். மேலும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்யக்கூடிய நடிகர்களில் மிக முக்கியமானவர்.

ஹீரோவாக நடித்த சில படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால் கொஞ்சம் மாஸ் ஹீரோவாக ஆசைப்பட்டு கதையில் கவனம் செலுத்தாமல் சொதப்பியதால் தற்போது கொஞ்சமும் மார்க்கெட் இல்லாமல் தடுமாறி வருகிறார் ஜீவன்.

ஜீவன் நடிப்பில் அடுத்ததாக பாம்பாட்டம் என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார். இந்த படத்தின் புகைப்படங்கள் கூட சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகியது.

ஜீவன் நடித்த சில படங்கள் அப்படியே பெட்டிக்குள் முடங்கி விட்டது. சில படங்கள் பாதியில் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஜீவன் படங்கள் தோல்வியடைந்தாலும் அதை பற்றி கவலைப்படாத நடிகர் என்று கூறுகின்றனர். அதற்கு காரணம் அவர் பிறப்பிலேயே ஒரு பயங்கரப் கோடீஸ்வரராம்.

திண்டுக்கல்லில் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கிறாராம் ஜீவன். அவரது தந்தை நடத்தி வந்த தொழிலை தற்போது ஜீவன் கவனித்து வருகிறாராம். இடையிடையில் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் எனவும் கூறுகின்றனர்.

சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தால் தான் சினிமாவில் சில படங்களில் நடித்து தனக்கென ஒரு பாதையை உருவாக்கி வெற்றி நடை போட்டார் எனவும், சினிமாவில் உள்ள சில ஆட்களால் அவருடைய படங்கள் முடங்கி மார்க்கெட் இல்லாமல் போனது எனவும் கூறுகின்றனர்.

மேலும், ஜீவன் என்னதான் பெரிய பணக்காரராக இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் எளிமையாக பழகி நிறைய நட்புகளை சம்பாதித்து வைத்துள்ளார். பணம் காசு இருந்தாலும் தான் நேசித்த தொழிலுக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கிச் செல்லக்கூடியவர் எனவும் கோலிவுட்டில் பல பேர் குறிப்பிட்டுள்ளனர்.

jeevan-cinemapettai
jeevan-cinemapettai

Trending News