Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் இரண்டு, மூன்று எபிசோடுகள் வந்தாலும் அனைவரது மனதிலும் கயல்விழியாக அவருக்கான இடத்தை பிடித்து விட்டார். அதாவது ஜீவானந்தத்தின் அழகிய குடும்பத்தை காட்டி பார்ப்பவர்களின் மனதிற்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார். அது பார்த்து ஆனந்தப்படும் நேரத்தில் இவர்களுடைய கூட்டை சுக்கு நூறாக உடைத்து விட்டார் குணசேகரன்.
இதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த ஜீவானந்தம் மற்றும் இவருடைய மகள் வெண்பா தற்போது அப்பத்தாவுடன் இருந்து வருகிறார்கள். இவர்களைப் பார்ப்பதற்கு குணசேகரன் வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் போய்விட்டார்கள். அங்கே ஈஸ்வரியை பார்த்து ஷாக்காகி நிற்கிறார் ஜீவானந்தம்.
அத்துடன் ஜீவானந்தத்தின் மகளுக்கும் ஈஸ்வரியை பார்க்கும் பொழுது அம்மாவை பார்ப்பது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது. இதை வெண்பா ஈஸ்வரிடம் சொல்லியபோது அப்படியே கட்டி அரவணைத்து கொள்கிறார். இதை பார்த்த ஜீவானந்தம் அவரது கண்ணில் சொல்ல முடியாத ஒரு பந்தம் மற்றும் ஏக்கம் இருப்பது போல் தெரிகிறது.
ஈஸ்வரியை ஜீவானந்தத்துக்கு மட்டும் பிடிச்சு போகல தற்போது இவருடைய மகள் வெண்பாவுக்கும் ரொம்பவே பிடித்து போய்விட்டது. இதனைத் தொடர்ந்து வெண்பாவை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று ஜீவானந்தமிடம் கேட்கப் போகிறார் ஈஸ்வரி. அதே நேரத்தில் ஜீவானந்தமும் சமூக சேவை செய்வதில் பிஸியாக இருப்பதால் இந்த சூழலில் வெண்பா இவருடன் இருக்கிறது சரியாக இருக்காது என்று ஈஸ்வரிடம் அனுப்பி வைக்கப் போகிறார்.
அத்துடன் நந்தினி ஏற்கனவே குற்ற உணர்ச்சியால் துடித்துக் கொண்டிருப்பதால் இந்த குழந்தையை பொக்கிஷமாக பாதுகாக்க போகிறார். ஆக மொத்தத்தில் வெண்பா குணசேகரன் வீட்டில் இருக்கும் நான்கு மருமகளுடன் வளர போகிறார். ஆனால் இதை குணசேகரன் எந்த மாதிரி எடுத்துக் கொண்டு பிரச்சனை செய்யப் போகிறார் என்பது தெரியவில்லை.
அத்துடன் ஜீவானந்தம் மற்றும் ஈஸ்வரிக்கு உள்ள பழைய காதல் விஷயங்கள் தெரிந்தால் இதை எந்த எல்லைக்கு கொண்டு போகப் போகிறார் என்பதும் புரியவில்லை. எப்படி இருந்தாலும் இனி குணசேகரன் வெத்துவேட்டாக தான் திரியப் போகிறார். இவர் கூட ஒட்டின பாவத்திற்கு கதிர் மற்றும் ஞானமும் கஷ்டப்பட போகிறார்கள்.
Also read: அட எதிர்நீச்சல் குணசேகரன் எல்லாம் சும்மாதான்.. இந்த நடிகை இல்லனா சன் டிவி டிஆர்பி இல்லையாம்!