சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

தொடர்ந்து கதையை சொதப்பும் எதிர்நீச்சல் சீரியல்.. மொத்த குறியும் குணசேகரன் மீது வைக்கும் ஜீவானந்தம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் ஆரம்பத்தில் அனைவரும் கொண்டாடும் அளவிற்கு சிம்ம சொப்பனமாக வந்த கதை தற்போது காக்கா வடையை தூக்கிட்டு போன கதையாக சின்ன பிள்ளைத்தனமாக போய்க் கொண்டிருக்கிறது. இப்படியே போனால் இந்த நாடகத்தை கூடிய விரைவில் ஊத்தி மூட வேண்டிய நிலைமைக்கு போய்விடும். அந்த அளவிற்கு ஒவ்வொரு நாளும் கதையை சொதப்பிக்கொண்டு வருகிறார்கள்.

அதாவது கௌதம் பக்கவாக பிளான் பண்ணி கதிரை கச்சிதமாக பொறிவைத்து தூக்கி விட்டார். அத்துடன் அவரை வச்சு செய்யும் அளவிற்கு தரமான சம்பவத்தை செய்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கடைசியில் போலீஸ் வந்ததும் கௌதம் மற்றும் மொத்த கூட்டமும் துண்ட காணும் துணிய காணும் என்று தலை தெரிக்க ஓடி விட்டார்கள்.

இதனால் இவர்களிடம் இருந்து கதிர் எஸ்கேப் ஆகிய விடுகிறார். கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாதபடி கௌதமின் அசால்ட்தனத்தால் மொத்தத்தையும் கோட்டை விட்டுவிட்டார். இதனால் கதிர் தப்பித்து நடந்த எல்லா விஷயத்தையும் குணசேகரனிடம் சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் கயல்விழி இறப்பிற்கு காரணம் நாம் தான் என்ற உண்மையும் அவர்களுக்கு தெரிந்து விட்டது என்று தெரிந்ததால் குணசேகரன் மற்றும் கதிர் உஷார் ஆகுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனாலும் குணசேகரனை மொத்தமாக காலி பண்ண வேண்டும் என்று ஜீவானந்தம் முடிவு பண்ணி இருக்கிறார். அதனால் இந்த திருவிழா நிகழ்ச்சியில் குணசேகரனை குறி வைத்து கண்டிப்பாக அவரை க்ளோஸ் பண்ணுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதற்கிடையில் கதிர் மற்றும் வளவன் ஜீவானந்தத்தை தூக்குவதற்கு பக்கவாக பிளான் பண்ணி இருக்கிறார்கள்.

அந்த வகையில் இந்த திருவிழா நிகழ்ச்சியில் யார் யார் உயிர் போகப் போகிறது. யாருக்கு என்ன நடக்க இருக்கிறது என்பது தற்போது விறுவிறுப்பான கதையாக வந்து கொண்டிருக்கிறது. அதனால் ஓரளவுக்கு மக்கள் தற்போது பார்த்துக் கொண்டு வருகிறார்கள். இதிலேயும் ஏதாவது சொதப்பல் நடந்து விட்டால் மொத்தமாகவே இந்த நாடகத்தை தலைமுழுகி விடுவார்கள்.

எது எப்படியோ குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவின் எதார்த்தமான நடிப்பு இல்லாததால் மொத்த கதையும் தடம் மாறிப் போய்விட்டது. இதிலிருந்து எப்படியாவது மீண்டும் பழையபடி டிஆர்பி ரேட்டிங்கை பிடிக்க வேண்டும் என்று மொத்த டீமும் போராடி வருகிறார்கள். ஆனாலும் இதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை ராஜா என்று சொல்வதற்கு ஏற்ப மக்கள் வெறுத்துக் கொண்டுதான் வருகிறார்கள்.

Trending News