ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

குணசேகரனின் கேரக்டரை டம்மி ஆக்கிய ஜீவானந்தம்.. ஈஸ்வரி எடுக்க போகும் முடிவு என்ன தெரியுமா?

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் ஆரம்பித்த நாளிலிருந்து இப்பொழுது வரை விடாமல் பார்த்து வரும் ஒரே நாடகம் இதுதான். யூகிக்கவே முடியாத அளவிற்கு கதை சுவாரசியமாக நகர்ந்து வருகிறது. இதில் இத்தனை நாளாக குணசேகரனின் கேரக்டர் தான் ஒய்யாரத்தில் இருந்தது. ஆனால் ஜீவானந்தம் வந்த கொஞ்ச நாளிலே அனைவரது கவனத்தையும் ஈர்த்து விட்டார்.

முக்கியமாக ஈஸ்வரியின் எக்ஸ் காதலனாக வந்ததிலிருந்து இவருடைய பவர் வேற லெவலுக்கு மாறிவிட்டது. மறுபடியும் எப்பொழுது ஜீவானந்தத்தை பார்க்கலாம் என்று ஏங்க வைத்துவிட்டது. மேலும் இதுவரை ஈஸ்வரிக்கு சொல்லும் படியான எந்த ஒரு காட்சியும் அமைக்கப்படவில்லை. இப்பொழுது இவருடைய காதல் ஆரம்பித்ததில் இருந்து ஈஸ்வரி உடைய கேரக்டர் நின்னு பேசுகிறது.

Also read: வைரலாகும் இளம் வயது ஜீவானந்தம், ஈஸ்வரி காதல் புகைப்படம்.. கதறி அழும் குணசேகரன் பொண்டாட்டி

இதனை தொடர்ந்து ஈஸ்வரி கட்டின புருஷனுக்காக போராட போகிறாரா இல்லையென்றால் ஜீவானந்தத்திற்கு உதவி செய்யப் போகிறாரா என்பது தான் யூகிக்க முடியலை. ஆனால் கண்டிப்பாக ஜீவானந்தத்தின் நல்ல மனசு தெரிந்ததால் இவருக்கு தான் சப்போர்ட் செய்யப் வாய்ப்பு இருக்கிறது. அடுத்த கட்டமாக ஜீவானந்தத்தை நேரடியாக பார்த்து பேச வேண்டும் என்று ஜனனி தேடிக் கொண்டிருக்கிறார்.

இது ஈஸ்வரிக்கு நன்றாக தெரிந்தும் ஜீவானந்தத்தை பார்த்ததை இன்னும் இவர்களிடம் சொல்லவில்லை. அப்படி இருக்கும் பொழுது இவருடைய காதலை ஜனனி, ரேணுகா, நந்தினி இடம் சொல்வாரா அல்லது இவர்களிடம் இருந்து மறைத்து விட போகிறாரா? மேலும் இந்த காதல் விவகாரம் குணசேகரனுக்கு தெரிந்தால் இதை வைத்து சொத்தை எப்படி மீட்கலாம் என்று தான் பிளான் போட போகிறார்.

Also read: தூங்கு மூஞ்சி அருணை நினைத்து புது மாப்பிள்ளையே வெறுக்கும் ஆதிரை.. எக்ஸ் காதலியே பார்க்க மறுத்த ஜீவானந்தம்

எப்படியோ ஜீவானந்தம், ஈஸ்வரிடம் பேசியதிலிருந்து ஒரு விஷயம் நன்றாகவே புரிகிறது. காலம் தான் எல்லாத்துக்கும் பதில் சொல்லும் என்று சொன்னார். அப்படி இருக்கும் பொழுது குணசேகரனிடம் இருந்து அந்த 40% சொத்தை பாதுகாக்க தான் ஜீவானந்தம் இந்த மாதிரி அதிரடியான முடிவை எடுத்திருக்கிறார் என்பது புரிகிறது. எப்பொழுது இந்த சொத்தை இவர்களிடம் சேர்க்க வேண்டும் என்று ஜீவானந்தத்திற்கு நன்றாகவே தெரியும்.

அதனால் கண்டிப்பாக அப்பத்தாவின் 40% சொத்து பாதுகாப்பாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இவருடைய கேரக்டர் படி அந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சப்போர்ட்டாக பயணித்து வருவார். அதாவது கோலங்கள் சீரியலில் தேவயானிக்கு கடைசி வரை ஒரு நல்ல தோழனாக தோள் கொடுத்தார். அதை போல் இதிலும் இவருடைய கேரக்டர் நின்னு பேசும் அளவிற்கு ரொம்பவே ஸ்ட்ராங்காக அமையப்போகிறது.

Also read: ஆதிரை தலையில் இடியை இறக்கிய கரிகாலன்.. ஈஸ்வரிக்காக எதையும் செய்யத் துணிந்த ஜீவானந்தம்

Trending News