Ethirneechal Gunasekaran: கரிகாலன் என்ற கேரக்டரை அவ்வளவு சீக்கிரமாக நாம் அனைவரும் மறந்திருக்க மாட்டோம், அந்த அளவிற்கு ஒரு எதார்த்தமான நடிப்பையும் பாவப்பட்ட முகத்தையும் வைத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். சமீபத்தில் முடிந்து போன எதிர்நீச்சல் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் கரிகாலன் நடித்திருந்தார். அப்படிப்பட்ட இவருடைய கேரக்டர் ஆரம்பத்தில் ஒரு டம்மியாக காட்டப்பட்டது.
ஆனால் போகப் போக இவருடைய நடிப்பு பிடித்துப் போனதால் ரசிகர்கள் இவரை வரவேற்க ஆரம்பித்தார்கள். அதனால் தான் திடீர் திருப்பமாக ஆதிரை விருப்பப்படி கல்யாணம் நடக்காமல் கரிகாலன் கேரக்டரை கொண்டு வர வேண்டும் என்பதற்காக அடாவடித்தனமாக இவர்களுடைய கல்யாணம் நடந்தது. அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் கரிகாலன் கேரக்டரை புரிந்துகொள்ள முடியாது அளவிற்கு ஒரு வித்தியாசமான நடிப்பாக தான் இருந்தது.
தொடங்கப் போகும் கரிகாலனின் ஆட்டம்
ஆனால் குணசேகரன் நம்பியிருந்த தம்பிகள் கூட கைவிட்ட நிலையில், கடைசி வரை குணசேகரனின் கை பிள்ளையாக இருந்து ஒரு நன்றியுள்ள விசுவாசியாக கரிகாலன் இருந்தார். ஆனாலும் சில பல காரணங்களாக எதிர்நீச்சல் சீரியல் அவசர அவசரமாக முடிந்து விட்டது. இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஆர்டிஸ்ட்டுகளுக்கும் பெரிய ஏமாற்றமாக அமைந்துவிட்டது.
அந்த வகையில் ஜீவானந்தம் எடுக்க போகும் அடுத்த அத்தியாயத்தில் புது ஆர்டிஸ்ட்டுகளை தேர்ந்தெடுத்து வருகிறார். ஆனால் அதில் கரிகாலன் கேரக்டர் இல்லை என்பது தெரிந்து விட்டது. இதனால் ஜீவானந்தம் கரிகாலனை கழட்டி விட்டதால், சன் டிவி கரிகாலனின் நடிப்புக்கு ஆதரவு கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் புதிதாக வரப்போகும் சொக்கத்தங்கம் என்ற நாடகத்தில் கரிகாலன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார்.
மேலும் சன் டிவியில் மதியம் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி நாடகம் முடியப்போகிறதால், அதற்கு பதிலாக சொக்கத்தக்க நாடகம் வரப்போகிறது. இனி இதில் கரிகாலனின் நடிப்பை நாம் பார்க்கலாம்.
எதிர்நீச்சல் சீரியலின் சுவாரசியமான சம்பவங்கள்
- காதலை வைத்து ஆடுபுலி ஆட்டம் ஆடும் ஜீவானந்தம்
- குணசேகரனின் கேரக்டரை டம்மி ஆக்கிய ஜீவானந்தம்
- எதிர்நீச்சலை க்ளோஸ் பண்ண சன் டிவி மாறன் சொன்ன விஷயம்