புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ரத்த கொதிப்பை ஏற்படுத்தும் எதிர்நீச்சல் சீரியல்.. மொத்த கதையும் கெடுத்த ஜீவானந்தம் குணசேகரன்

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் போடும் டிராமாவை பார்ப்பதற்கு கடுப்பாக இருக்கிறது. இவருக்கு ஏற்ற மாதிரி தர்ஷினியும் அப்பா அப்பானு புலம்பி தவிப்பது இது என்ன கொடுமை என்று தலையில் அடித்து புலம்பத் தோன்றுகிறது.

இதை சாதகமாக வைத்து குணசேகரன், என் பிள்ளையை இந்த கெதிக்கு ஆளாக்கின அந்த ஜீவானந்தத்தையும் ஈஸ்வரியும் சும்மா விடக்கூடாது என்று ஓவராக கொந்தளிக்கிறார். இதுல இடையில வேற ஜனனி பேசும் டயலாக் பார்க்கும் பொழுது இன்னும் கடுப்பேற்றுகிறது.

சும்மா ஓவர் டயலாக் பேசி வெத்து வெட்ட்டாக இருக்கும் நான்கு பெண்களுமே வாய்சவடால்க்கு தான் லாய்க்கு. அதாவது இந்த சீரியலை கிட்டத்தட்ட ஒரு நான்கு வருஷமாக ஓட்டிட்டு வருவார்கள். அப்படி அந்த நான்கு வருஷத்துலேயும் கெட்டவராக இருக்கும் குணசேகரன் தான் ஜெயித்து வருகிற மாதிரி கதை வரும்.

பிறகு கடைசியில் ஒரே ஒரு எபிசோடில் நான்கு மருமகளும் சொந்த காலில் நின்னு சாதித்து விட்டார்கள் என்று கதையை காட்டி முடித்து விடுவார்கள். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த நாடகத்தை பார்ப்பவர்கள் தான் நொந்து நூடில்ஸ் ஆகி போக வேண்டும்.

உண்மையான இயக்குனர் மாரிமுத்து தான்

அந்த வகையில் இந்த நாடகத்தை இரவு பார்த்துவிட்டு தூங்கினால் மொத்த தூக்கமும் கெட்டுப் போகுது. அத்துடன் இந்த கதையை பார்க்கும் பொழுது ரத்த கொதிப்பு வந்துவிடும் என்று நாடகத்தை பார்ப்பவர்கள் புலம்பி கொண்டு வருகிறார்கள்.

அதிலும் இன்னும் சில பேர் இந்த நாடகத்தை பார்ப்பதை விட்டுவிட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இந்த பிரமோவை பார்த்தாலும் நெஞ்சமெல்லாம் பதறுகிறது என்று புலம்புகிறார்கள். எப்படி இருந்த இந்த எதிர்நீச்சல் சீரியல் இப்படி தரமாட்டமாக சீரழிந்து போய்விட்டதே.

இதற்கெல்லாம் காரணம் குணசேகரன் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் வேலராமமூர்த்தி மற்றும் ஜீவானந்தம் கதாபாத்திரத்தை ஹீரோயிசம் மாதிரி காட்ட வேண்டும் என்று சீரழித்து விட்டார்கள்.

அந்த வகையில் இப்பொழுது புரிகிற ஒரே ஒரு விஷயம் ஆரம்பத்தில் இந்த நாடகம் நன்றாக இருந்ததற்கு காரணம். குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து தான் டயலாக், ஸ்கிரிப்ட் அனைத்தையும் ரெடி பண்ணி நடிப்பையும் தூக்கலாக கொடுத்திருப்பது தெரிய வருகிறது. அதனால் தான் அவர் போனதற்கு பிறகு நாடகமே தலைகீழாக மாறிவிட்டது.

Trending News