Sun tv Ethirneechal: சன் டிவியில் மறக்க முடியாத சீரியலாக எத்தனையோ சீரியல்கள் இருந்தாலும் சில சீரியல்கள் எப்போதுமே மக்களின் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கிறது. அந்த வகையில் குடும்பங்கள் கொண்டாடும் சீரியலாக சித்தி, அண்ணாமலை, கோலங்கள், மெட்டிஒலி, நாதஸ்வரம், கல்யாண வீடு போன்ற சீரியல்கள் அனைத்தும் டாப் டக்கர் என்று சொல்லும் அளவிற்கு சன் டிவியில் மெகா ஹிட் ஆகியிருக்கிறது.
இதனை தொடர்ந்து இயக்குனர் திருச்செல்வம் இயக்கிய எதிர்நீச்சல் சீரியலும் பட்டி தொட்டி எல்லாம் பறந்து பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு சம்பவத்தை செய்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கதை மக்களை கவரக்கூடியதாக இருந்தாலும் இன்னொரு விதமாக குணசேகரன் கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடிப்பை பிரமாதமாக கொடுத்திருப்பார்.
எதிர்நீச்சல் டைட்டிலை மாற்றப் போகும் ஜீவானந்தம்
ஆனால் இவருக்கு பதிலாக குணசேகரன் கதாபாத்திரத்தில் வேறு ஒருவர் வந்த பிறகு கதை கொஞ்சம் தடுமாறி போய்விட்டது. அதனால் பார்ப்பவர்களிடமிருந்து நெகடிவ் கமெண்ட்ஸ்கள் வந்ததால் டிஆர்பி ரேட்டிங்கிலும் அடி வாங்கியது. இதனால் அவசர அவசரமாக இந்த நாடகத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டார்கள். இருந்தாலும் இது போன்ற ஒரு கதையை மறுபடியும் இயக்குனர் கொண்டு வர வேண்டும்.
அதுவும் எதிர்நீச்சலின் இரண்டாம் பாகமாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் அவர்களுடைய ஆதங்கத்தை கமெண்ட்ஸ் மூலம் தினம் தோறும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இது பற்றி இயக்குனர் திருச்செல்வத்திடம் கேட்டபொழுது கூடிய சீக்கிரத்தில் ஒரு கதையுடன் சந்திப்பேன். ஆனால் அது எதிர்நீச்சல் இரண்டாம் பாகமாக இருக்காது என்று கூறியிருந்தார்.
ஆனால் சமீபத்தில் ஜனனி கேரக்டரில் நடித்த மதுமிதா எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தில் நான் நடிக்கவில்லை. விலகிக் கொள்கிறேன் என்று ட்விட் போட்டிருந்தார். அதற்கு காரணம் அவர் திருமணம் செய்து கொள்வதாக ஒரு பக்கம் தகவல் நிலவி வருகிறது. ஆனால் இன்னொரு பக்கம் இயக்குனரே எதிர்நீச்சல் 2 கிடையாது என்று சொல்லி இருக்கிறார்.
அப்படி இருக்கும் பொழுது ஜனனி போட்ட ட்விட் சற்று குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று ரசிகர்கள் குழம்பிப் போய் கேள்வி கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சில தகவலும் வெளிவந்திருக்கிறது. அதாவது இயக்குனர் திருச்செல்வம் கூறியபடி எதிர்நீச்சல் 2 வரப் போவதில்லை. அதற்கு பதிலாக மக்களுக்கு பிடித்தமான வேறு ஒரு கதையுடன் விடாமுயற்சி என்ற சீரியலை கொண்டு வருவதற்கு தயாராக இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
எப்படி தொல்காப்பியம், ஜீவானந்தம் பெயர் நிலைத்திருந்ததோ அதே மாதிரி இதிலும் ஒரு கேரக்டரை கொண்டு வரப் போகிறார். அத்துடன் இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் தேவயானி நடிக்கப் போவதாகவும், மறுபடியும் கோலங்கள் டீம் மற்றும் எதிர்நீச்சல் நாடகத்தில் நடித்த சில கேரக்டர்களையும் கொண்டு வரப் போகிறார்.
இந்த நிலையில் இந்த நாடகத்திற்கான சூட்டிங் எல்லாம் ஆரம்பம் ஆகிய நிலையில் இன்னும் இரண்டு மாதங்கள் நாடகத்தை ஒளிபரப்பு செய்ய டைம் ஆகும். ஆனால் அதற்குள் பிரேம் டைம் கொடுக்க வேண்டும் என்பதற்காக கலாநிதி 9 மற்றும் 9:30 மணி நேரத்தை ஒதுக்குவதாக கூறியிருக்கிறார். ஏற்கனவே இந்த நேரத்தில் மல்லி மற்றும் மூன்று முடிச்சு என இரண்டு சீரியல்கள் டாப் டக்கர் ஆக போய்க்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இனியா சீரியலை முடித்த கையுடன் அதற்கு பதிலாக திருச்செல்வம் இயக்கி வரும் நாடகத்தை கொண்டுவர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் வெளியானதில் இருந்து மக்கள் இந்த ஒரு நாடகத்திற்காக நாங்கள் பெரிதும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும். அதே மாதிரி இயக்குனர் திருமுருகன் சீரியலும் எங்களுக்கு வேண்டும் என்று கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.
- Ethirneechal: குணசேகரன் மீசையில் மண் ஒட்ட செய்யப் போகும் சாருபாலா
- ஜீவானந்தம் கொடுத்த டிரெய்னிங், ஏமாறப்போகும் மருமகள்
- சொத்தை மீட்டெடுக்க ஐடியா கொடுத்த தர்ஷினி