திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சில கேரக்டர்களை குழி தோண்டி மூடிய ஜீவானந்தம்.. வன்மத்தை காக்கும் குணசேகரன், கோமாவுக்கு போன எதிர்நீச்சல்

Ethirneechal Serial: ஒரு காலத்தில் இல்லத்தரசிகளின் பேவரைட் சீரியலாக எதிர்நீச்சல் இடம் பிடித்ததால் அனைத்து குடும்பங்களிலும் இந்த நாடகத்தை தூக்கிக் கொண்டாடினார்கள். ஆனால் இப்பொழுது நாங்கள் எதிர்பார்க்கக் கூடிய கதையை இல்லை என்று புலம்பும் அளவிற்கு கதை நகர்ந்து வருகிறது. இருந்தாலும் இந்த நாடகத்தை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று சிலர் ஆதங்கத்தை கொட்டிக்கொண்டு பார்த்து வருகிறார்கள்.

ஆனால் தற்போது புதுசு புதுசாக கேரக்டர்கள் உள்ளே நுழைகிறது. அதற்கு ஏற்ற மாதிரி தினசாக கதை தடுமாறிக் கொண்டு போகிறது. அந்த வகையில் சில கேரக்டர்கள் என்ன ஆச்சு, அவர்கள் எங்கே என்று தேடும் அளவிற்கு அவர்களை குழிதோண்டி மூடிவிட்டார் ஜீவானந்தம். அதாவது அப்பத்தாவின் கதை கேள்விக்குறியாக இருக்கிறது. இவர் இறக்கவும் இல்லை எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.

டிராக்கை மாற்றிய ஜீவானந்தம்

அத்துடன் ஆதிரை, குணசேகரனை எதிர்த்து தனக்கு பிடித்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் போகிறேன் என்று அருணை தேடி போனார். ஆனால் அதன் பிறகு ஆதிரைக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை. அது மட்டும் இல்லாமல் தன் கொழுந்தன் இந்த நிலைமையில் இருப்பதற்கு காரணம் குணசேகரன் தான் என்று தெரிந்தவுடன் சாறு பாலா ஆவேசத்தில் கொந்தளித்தார்.

அவருக்கு உரிய தண்டனையை நான் வாதாடி வாங்கி கொடுப்பேன் என்ற சொன்ன சாரு பாலாவையும் காணவில்லை. அடுத்து ஜீவானந்தமும் இந்த நாடகத்தில் என்ன ஒரு கேரக்டராக இருக்கிறார் என்று சரியாக தென்படவில்லை. அவ்வப்போது மின்னல் மாறி வருகிறார். ஈஸ்வரிக்கு ஏதாவது ஒரு சப்போர்ட் பண்ணிவிட்டு காணாமல் போய்விடுகிறார்.

இவர்களை தொடர்ந்து கரிகாலன் அம்மாவாக நடித்த ஜான்சி ராணி கேரக்டரை அப்படியே மூடிவிட்டார்கள். அடுத்ததாக எஸ்கேஆர், அரசு, கிள்ளிவளவன் போன்ற சில கேரக்டர்கள் பாதியிலேயே தூக்கி விட்டார்கள். ஆனால் அதற்கு பதிலாக இப்பொழுது புதுசு புதுசாக டிராக்கை மாற்றிக்கொண்டு புரியாத புதிதாக கதையை இழுத்தடிக்கிறார்கள்.

கடந்த வருடம் இந்த சீரியலுக்காக பெஸ்ட் அவார்ட் விருதை இயக்குனர் வாங்கினார். அதனால் என்னமோ கொஞ்சம் தலைக்கனம் கூடியதால் அவருடைய இஷ்டத்திற்கு ஏற்ற மாதிரி கதையை கொண்டு வருகிறார். அந்த வகையில் இந்த வருடம் இருக்கும் இடம் தெரியாமல் டிஆர்பி ரேட்டிங்கில் அடிபட்டு விட்டது.

ஒருவேளை ஜீவானந்தம் கோமாவுக்கு போய்ட்டாரோ என்னமோ, இவருடன் சேர்ந்து வன்மத்தை மட்டுமே ஸ்கிரிப்ட் ஆக எழுதி வரும் ஸ்ரீவித்யாவும் மக்களின் ஆதங்கத்தை புரிந்து கொள்ளவில்லை. இப்பொழுதுதான் புரிகிறது இந்த நாடகத்திற்கு ஆரம்பத்தில் உயிர் கொடுத்தது குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து தான். அவர் இல்லை என்றதும் இந்த நாடகமே தலைகீழாக மாறிவிட்டது.

Trending News