சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

9 வாரத்தில் கேப்டனாக பொறுப்பை ஏற்ற ஜெஃப்ரி.. கோவா டீமில் ஏற்பட போகும் ரகளை, சாச்சினாவின் சாப்டர் க்ளோஸ்

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் பொம்மை டாஸ்க் விறுவிறுப்பாக இருந்தது. இதுதான் பிக் பாஸ் வீடு என்று சொல்வதற்கு ஏற்ப சுவாரசியமாக அமைந்தது. அந்த வகையில் அடிதடி, வாய்க்கா தகராறு, பஞ்சாயத்து என ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது. இருந்தாலும் கடைசியில் ஜெஃப்ரி இந்த பொம்மை டாஸ்க் நல்லபடியாக முடித்து விட்டார்.

இதனை தொடர்ந்து அந்த வாரத்தில் சிறந்த போட்டியாளர்கள் விருதையும் ஜெஃப்ரி மற்றும் சாச்சினாவிற்கு கிடைத்தது. அந்த வகையில் இவர்கள் இருவரும் தான் இந்த வாரத்திற்கான கேப்டன் பொறுப்பை ஏற்கும் விதமாக போட்டி நடைபெற்றது. இதில் எப்படியாவது தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று சாச்சனா நினைத்திருந்தார். அப்பொழுதுதான் நாமினேஷனிலிருந்து நாம் எஸ்கேப் ஆக முடியும் என்பதால் தான்.

அதே நேரத்தில் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஜெஃப்ரி, கேப்டன் விளையாட்டை சாட்னாவிற்கு விட்டுக் கொடுத்து விடுவாரோ என்று நினைத்தார்கள். ஆனால் அதற்கு முன் கேப்டன் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று ஜெஃப்ரிக்கு சௌந்தர்யா நல்ல அட்வைஸ் பண்ணி பேசியதால் அதை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் ஜெஃப்ரி கேப்டன் டாஸ்கை நல்லபடியாக விளையாண்டு வெற்றி பெற்றுவிட்டார்.

அந்த வகையில் இந்த வாரத்திற்கான கேப்டன் ஜெஃப்ரி தான். மேலும் இவர் கோவா டீமின் போட்டியாளர்களில் ஒருவர் என்பதால் சௌந்தர்யா, ரயான் மற்றும் ஜாக்லீனுக்கு ஒரு தலைப்பட்சமாக இல்லாமல் அவருக்கு கிடைத்த பொறுப்பை சரிவர செய்தால் ஆட்டம் வேற லெவல் இருக்கும். அதற்கு தலைகீழாக கோவா டீமுக்கு கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்தால் மொத்தமாக சொதப்பி விடும்.

அதனால் எந்தவித ரகளையும் இல்லாமல் தீபக் கேப்டன் செய்தது போல் ஜெப்ரி அவருடைய பொறுப்பை சரிவர செய்தால் இன்னும் மக்களிடத்தில் அதிக ஓட்டு பெற வாய்ப்பு இருக்கிறது. மேலும் இதுவரை சாச்சினா ஆடிய ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி ஆக இந்த வாரத்துடன் சாச்சினாவின் சாப்டர் கிளோஸ் ஆகிவிடும் என்பதற்கு ஏற்ப இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது.

Trending News