இந்த வாரம் கேப்டன் ஆக தேர்வாகியுள்ளார் jeffry. ஆரம்பத்திலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இவருக்கும் அதிகமான வெறுப்பை குவித்து வைத்திருக்கும் சாச்சனாவுக்கும் தான் இந்த வாரம் captainship-காண போட்டி நடந்தது. அந்த போட்டியில், jeffry ஜெயித்தார். இதில் உச்சகட்ட மகிழ்ச்சிக்குள்ளான நபர் யார் என்றால் அது சௌந்தர்யா தான்.
மேலும் முதலில் சாச்சனாவுக்கு விட்டுக்கொடுக்கவிருந்த jeffry மண்டையை கழுவியதும் சௌந்தர்யா தான். விட்டுக்கொடுக்காத இது உனக்கான வாய்ப்பு என்று பயங்கரமாக motivate செய்தார். ஆனால் சாச்சனாவுக்கு ஆதரவாக இருக்கும் ஆர்.ஜெ.ஆனந்தி ஜாக்யூலின் போன்றவர், jeffry-இடம் ஏன் விட்டுக்கொடுக்கவில்லை என்று கேள்வி கேட்டார்கள்.
அதற்க்கு காரணம் இந்த வாரம் எலிமினேஷன் பிரீ பாசும் jeffry-யிடம் தான் உள்ளது. அதனால், வீட்டிலிருந்து வெளியேறாமல் இருக்கும் வாய்ப்பை சாச்சனாவுக்கு கொடுத்திருக்கலாமே என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது. எது எப்படியாக இருந்தாலும், ஒரு கேப்டன்-ஆக சிறப்பான ஆட்டத்தை தான் வெளிப்படுத்துகிறார்.
ஸ்ட்ரிக்ட் officer-ஆக மாறிவிட்டார் jeffry. இதனால் மிகவும் பாதிக்கப்பட்டது என்னவோ சௌந்தர்யா தான். ஏன் என்றால் பொதுவாக சௌந்தர்யாவின் attitude-ல் நிறைய பேருக்கு பிரச்சனையுள்ளது.
அடுத்தவர்கள் பேசும்போது, அதை அலட்சியம் செய்யும் விதமாக அவர் நடந்துகொள்வது, உதாசீனம் செய்வது போல உள்ள body language அவரிடம் உள்ளது. எத்தனை முறை இது சரியல்ல என்று கூறினாலும், அவர் அதை பொருட்படுத்துவதில்லை.
அதே போல தான் தற்போது ஒரு வேலையை பார்த்து jeffry-இடம் வாங்கி கட்டிக்கொண்டு உள்ளார். அடுத்தவர் பேசும்போது, அவர்களை பேசவிடாமல் சௌந்தர்யா ஒரு attitude-ஐ வெளிப்படுத்தியுள்ளார்.
அப்போது டென்ஷன் ஆன jeffry சௌந்தர்யாவை நோஸ் கட் செய்வது போல பேசியுள்ளார். இதை தொடர்ந்து இந்த அவமானம் உனக்கு தேவையா என்று ரசிகர்கள் நக்கல் செய்து வருகின்றனர்.