சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

வைர நகைகளோடு திருமணத்திற்கு தயாராகும் வனிதா விஜயகுமார்.. தீயாக பரவும் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். வாய்ப்புகள் குறைந்து ஒரு கட்டத்தில் சினிமாவில் இல்லாமல் போன நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் தன்னுடைய இன்னிங்சை பதிவு செய்தார்.

தற்போது தொடர்ந்து பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இவர் அடிக்கடி ஷாப்பிங் செய்யும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது திநகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் எலைட் டைமண்ட்ஸ் ஷோரூமில் ஷாப்பிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணப்பெண் அலங்காரத்திற்கு தேவையான வைர நகைகளை அணிந்து மணப்பெண் போலவே மாறியுள்ளார். தி நகர் மற்றும் தாம்பரத்தில் மிக பிரம்மாண்டமான செயல்பட்டு வரும் கடை தான் சரவணா ஸ்டோர்ஸ் எலைட்.

இந்தியாவிலேயே வைரம் மற்றும் பிளாட்டினத்திற்கென மிக பிரம்மாண்டமான பிரத்யேகமான ஷோ ரூமை கொண்ட ஒரே நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ் எலைட் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News