வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஜெயம் ரவி கேரக்டருக்கு இப்படி ஒரு டிவிஸ்ட்டா.. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இருக்கும் சஸ்பென்ஸ்

ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை எழுத இந்த படத்தை மணிரத்தினம் இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகிறது.

பொன்னியின் செல்வன் என்பது ஆசிரியர் கல்கி எழுதிய வரலாற்று புதினம். கிபி 1950 முதல் 1955 வரை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக கல்கி வார இதழில் வெளியான இந்த தொடர்கதை மக்களின் அதீத ஆதரவினால் 5 பாதிப்புகளை கொண்ட நூலாக வெளியானது. புதுவெள்ளம், சூழல் காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பகுதிகளை கொண்டது.

Also Read: மணிரத்தினத்தின் மொத்த வசூல் டார்கெட்டும் இதுதான்.. பான் இந்தியா ரிலீஸ் எல்லாம் சும்மா கண் துடைப்பு

பழையாறை தேசத்தில் உடல் நலம் குன்றி இருக்கும் சுந்தர சோழனுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். மூத்த மகன் ஆதித்ய கரிகாலன் அவனுடைய தாத்தா மலையமான் உடனும், மகள் குந்தவை குடந்தையில், கடைசி மகனான அருள்மொழி வர்மன் இலங்கையில் போரிலும் இருப்பது போல இந்த கதை ஆரம்பிக்கும். ஆதி அந்தமில்லா இந்த கால வெள்ளத்தில் முதலில் இருந்து கடைசி வரை வந்தியத்தேவன் மட்டும் தான் பயணிப்பான்.

மணிரத்தினத்தின் கதையில் அருள்மொழி வர்மனாக வருவது ஜெயம் ரவி. அதாவது கதைப்படி வந்தியத்தேவனான கார்த்தி தான் நம்முடன் படம் முழுவது பயணிக்க போவது. அருள்மொழி வர்மனான ஜெயம் ரவி அவர் அண்ணன் ஆதித்ய கரிகாலன் மரணம் வரை இலங்கையில் தான் இருப்பார்.

Also Read: பொன்னியின் செல்வனுடன் மோதவிருக்கும் 2 பிரபலங்கள்.. தமிழனுக்கு தமிழனே சப்போர்ட் பண்ணலைனா எப்படி ?

அப்படி பார்க்கும் போது ஜெயம் ரவிக்கு பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் காட்சிகளே இல்லை என்று சொல்லலாம். ஜெயம் ரவி முதல் பாகத்தின் இறுதியில் வரவும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி இல்லை என்றால் இரண்டாம் பாகத்தில் தான் ஜெயம் ரவி இருப்பார். ஜெயம் ரவியின் இந்த கேரக்டரில் இப்படி ஒரு டிவிஸ்ட் இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

முதல் பாகத்தில் அதிகமாக வரப்போவது வந்திய தேவனான கார்த்தியும், ஆழ்வார்க்கடியான் நம்பியான ஜெயராமும் தான். இப்போது பொன்னியின் செல்வன் படக்குழு படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆறு மாதத்தில் வெளியாகும் என இயக்குனர் மணிரத்தினம் கூறியிருக்கிறார்.

Also Read: வாங்கிய காசுக்காக உயிரை கொடுத்த மணிரத்னம்.. பொன்னியின் செல்வனை உதயநிதிக்கு கொடுக்காததன் பின்னணியில் இருக்கும் விஷயம்

Trending News