ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

2 ஆம் பாகத்துக்கு தயாரான ஜெயம் ரவி.. அண்ணனை நம்புனா வேலைக்காவாதுன்னு சரண்டரான சித்தார்த்

மோகன் ராஜா ரீமேக் படங்கள் தான் எடுப்பார். இவருக்கு சொந்தமாக யோசித்து படம் எடுக்க தெரியாது என்ற பேச்சுக்களை உடைத்து “தனி ஒருவன்” என்ற பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார் அவரது உடன் பிறந்த தம்பி ஜெயம் ரவியின் கேரியர் பெஸ்ட் படம் இதுதான்.

இப்பொழுது ஜெயம் ரவி தொடர்ந்து பெயிலியர் படங்களை கொடுத்து வருகிறார். 2019 கோமாளி படத்திற்கு பின் அவருக்கு எந்த படமும் ஹிட்டாக அமையவில்லை. பூமி, அகிலன், இறைவன், சைரன் என அடுத்தடுத்த படங்கள் எல்லாம் ஃபிளாப் படங்களாக அமைந்தது.

ஏற்கனவே மோகன் ராஜா தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப் போவதாக ஒரு பேச்சு அடிபட்டது. அந்த படத்தில் அவரே வில்லனாக நடிக்கப் போவதாக கிலிம்ஸ் வீடியோக்கள் எல்லாம் வந்தது. இருந்தாலும் ஒரு வருடம் கடந்தும் அந்த படத்தை பற்றிய எந்த ஒரு பேச்சுக்களும் வெளிவரவில்லை மாறாக ஜெயம் ரவியின் சினிமா கேரியர் தான் கேள்விக்குறியானது.

அண்ணனை நம்பி பிரயோஜனமில்லைன்னு சரண்டான சித்தார்த்

இப்பொழுது ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் இருக்கிறார் ஜெயம் ரவி. அதனால் அண்ணன் மோகன் ராஜாவை நம்பாமல் அவருக்கு சூப்பர் ஹிட்டாகிய மற்றொரு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க முடிவெடுத்து விட்டார். 2016ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த படம் மிருதன்.

சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் வெளிவந்த மிருதன் படம் இப்பொழுது இரண்டாம் பாகம் எடுக்க ரெடியாகிவிட்டது. 2025க்குள் படம் முடிந்து விடும். தற்சமயம் இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் வேலைகளை ஆரம்பித்து விட்டனர். தமிழில் முதன் முதலாக வெளிவந்த ஜோம்பி திரைப்படம் இது தான். இப்பொழுது ஜெயம் ரவி, பிரதர், ஜினி ஆகிய இரண்டு படங்களில் நடித்துவருகிறார்.

Trending News