திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஜெயம் ரவி முடிவுக்கு முழுக்க முழுக்க காரணமான பணம்.. பிரித்விராஜ் போல் கெட்டவனா மாறிய பிரதர்

உருண்டு பிரண்டு, முட்டி மோதி பார்த்தும் ஜெயம் ரவிக்கு கெட்ட நேரம் விலகுவதாக தெரியவில்லை. அதனால் கெட்டவனாகவே மாறிவிடலாம் என புது முடிவை எடுத்து விட்டார். நல்லவனாக ஜெயிக்க முடியவில்லை கெட்டவனுக்கும் அதே அளவு தான் என போற ரூட்டை மாற்றிவிட்டார்.

தீபாவளிக்கு ரிலீசான பிரதர் படத்தில் தான் கடைசியாக ஜெயம் ரவி நடித்திருந்தார். அதன் பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கும் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் சுதா கொங்காரா இயக்கப் போகும் புறநானூறு படத்தில் வில்லன் அவதாரம் எடுக்க உள்ளார்.

ஏற்கனவே புறநானூறு படத்திற்கு வில்லன் கிடைக்காமல் திண்டாடி வந்தார் சுதா கொங்காரா . இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் சிவகார்த்திகேயனை விடவும் வில்லனுக்கு முக்கியமான கதாபாத்திரமாம். அதனால் அவர் இந்த கேரக்டருக்கு அருண் விஜய், பகத் பாசில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என எல்லோரையும் அணுகினார்.

ஆனால் யாரும் சரிவராத நிலையில் இப்பொழுது ஜெயம் ரவி இதில் கமிட்டாகி உள்ளார். அவர் ஹீரோவாக நடிக்க 15 கோடிகள் வரை சம்பளம் வாங்கி வந்தார். இப்பொழுது வில்லனாக நடிக்க 16 கோடிகள் இந்த படத்திற்கு சம்பளம் பேசியுள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் இந்த படத்தை ஒப்பு கொண்டதற்கு காரணமாக சில விஷயங்களை கூறுகிறார்கள்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் அவரை அடிப்பது போன்ற காட்சிகள் எல்லாம் கிடையாதாம் . இது முழுக்க முழுக்க வித்தியாசமான வில்லன் கதாபாத்திரமாம். அதாவது “கனா கண்டேன்” படத்தில் பிரித்திவிராஜ் வில்லனாக நடித்திருப்பார். அந்த மாதிரியான ஒரு கதாபாத்திரம் தான் ஜெயம் ரவிக்கும். கனா கண்டேன் படத்தில் ஹீரோவை விட வில்லனுக்கு தான் அதிக மாஸ் கிடைத்தது. இதனாலேயே ஜெயம் ரவி இந்த படத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

Trending News