வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பிரதருக்காக தலையை அடமானம் வைத்த ஜெயம் ரவி.. கடைசி நேரத்தில் இயக்குனருக்கு வந்த மண்டையடி

அமரன் மற்றும் பிளடி பக்கர் படங்களுடன் தீபாவளி ரேசில் களம் இறங்கினார் ஜெயம் ரவி. சமீபகாலமாக சினிமா கேரியரும், பர்சனல் கேரியரும் இவருக்கு உதவாத போதிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். மனைவியிடமிருந்து பிரிந்து இப்பொழுது ஜெயம் ரவி தனியாக வசித்து வருகிறார்.

ஜெயம் ரவியின் நெருங்கிய நண்பர்கள் அவருக்கு மும்பையில் ஒரு வீடு பார்த்து பிரச்சனை முடியும் வரை அங்கே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இப்பொழுது தீபாவளியன்று ரிலீசான ஜெயம் ரவியின் பிரதர் படத்திற்கும் பிரச்சனை வந்துள்ளது. படாத பாடுபட்டு அதை தீர்த்து வைத்துள்ளனர்.

பிரதர் படத்தை ஆரம்பத்தில் வாங்குவதாக அட்வான்ஸ் கொடுத்துள்ளார் கோல்டு மைன் மணிஷ் என்ற விநியோகத்தகர். இவர் இந்த படத்திற்காக 21 கோடிகள் கொடுத்துள்ளார். ஆனால் கடைசி நேரத்தில் படம் வேண்டாம் என கை விரித்து விட்டார். இதனால் படம் ரிலீஸ் ஆகுவதில் சிக்கல் ஏற்பட்டது.

படம் ரிலீஸ் செய்வதற்கு தீபாவளி தினத்தன்று இந்த 21 கோடிகளுக்காக மொத்த பட குழுவும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துள்ளனர். இயக்குனர் எம் ராஜேஷ் இதனால் பெரும் மனக்கஷ்டத்திற்கு ஆளானார். ஜெயம் ரவி தானே முன்வந்து பணம் கொடுத்து உதவி இந்த படத்தை ரிலீஸ் செய்ய உதவியுள்ளார். இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

அப்படி இப்படி என மொத்த பட குழுவினரும் திருப்பி கொடுப்பதற்காக 17 கோடிகள் வரை ரெடி பண்ணியுள்ளனர். ஆனால் கடைசியில் நான்கு கோடிகள் வரை படம் பணம் கொடுப்பதற்கு வழியில்லை . ஜெயம்ரவி இந்த நான்கு கோடிகளையும் புரட்டிக் கொடுத்துள்ளார். அவர் இருக்கும் கஷ்டத்தில் தாமாக முன்வந்து இதை கொடுத்தது அனைவருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending News