வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

25 கோடிகளிலிருந்து கட்டாந்தரைக்கு வந்த பிரதர் ஜெயம் ரவி.. தனி ஒருவனால் தத்தளிக்கும் தயாரிப்பாளர்

சமீப காலமாக ஜெயம் ரவிக்கு எல்லா பக்கமும் இடிபோல் அடி விழுந்து வருகிறது. அவரது பர்சனல் வாழ்க்கையும் சரியில்லை சினிமா கேரியரும் சரியில்லை. தனி ஒருவன், அடங்கமறு, டிக் டிக் டிக், மிருதன் என நன்றாக போய்க்கொண்டிருந்த அவரது கேரியருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

பூமி, சைரன், அகிலன், இறைவன் என்று தொடர்ந்து அடுத்தடுத்து ஃ ஃபெயிலியர்கள். இப்பொழுது அந்த வரிசையில் தீபாவளி தினத்தன்று வெளிவந்த பிரதர் படமும் சேர்ந்து விட்டது. இந்த படத்தால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த படம் இதுவரை வெறும் 8 கோடிகள் மட்டுமே வசூலித்துள்ளது.

இந்த படத்தை 13 கோடி ரூபாய்க்கு வாங்கி விநியோகம் செய்துள்ளார் லண்டன் கருணா. ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் பிரதர் படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஆனால் அவர்கள் படத்திற்கான லாபத்தை எடுக்க படாத பாடு பட்டு வருகிறார்கள்.4 கோடிகள் வந்தால் கூட போதும் என்று இருந்தவர்களுக்கு கொஞ்சம் கூட லாபம் கிடைக்கவில்லை.

ஒரு காலகட்டத்தில், தனி ஒருவன் ரிலீஸ் ஆன நேரத்தில் ஜெயம் ரவியின் மார்க்கெட் 25 கோடி ரூபாய் வரை இருந்தது. ஆனால் இப்பொழுது அதல பாதாளத்திற்கு சென்று, வெறும் 4 கோடிகள் என்ற அளவில் இருக்கிறது. தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்வதில் ஜெயம் ரவிக்கு சறுக்கல்கள் இருந்து வருகிறது.

ஜெயம் ரவிக்கு பின் திரை துறைக்கு வந்த ஹீரோக்கள் அனைவரும் இன்று அவரை தூக்கி சாப்பிட்டு விட்டனர். கவின், அசோக் செல்வன், ஹரிஷ் கல்யாண் போன்றவர்களது மார்க்கெட் கூட இன்று நல்ல நிலையில் இருக்கிறது. ஆனால் பெரிய திரை பின்புலத்தை சேர்ந்த ஜெயம் ரவிக்கு மட்டும் இப்பொழுது நேரம் சரியில்லை.

- Advertisement -spot_img

Trending News