வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ஜான்டி ரோட்ஸ்யிடமே பெஸ்ட் பீல்டர் என பெயர் வாங்கிய 5 கிரிக்கெட் வீரர்கள்.. கடைசில நம்மாளு ஒருத்தர் இருக்காரு!

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி நன்றாக பில்டிங் செய்யும் என பெயரெடுக்க முக்கியமான காரணம் ஜான்டி ரோட்ஸ் எனக் கூறலாம். இவர் எதிரணி வீரர்கள் அடிக்கக்கூடிய 30, 35 ரன்களை அசால்டாக தடுத்து விடுவார். எந்த அணியாக இருந்தாலும் பில்டிங் என்று வந்துவிட்டால் ரோட்ஸ் பெயரைத்தான் உதாரணமாகக் கூறுவார்கள்.

ஜான்டி ரோட்ஸ் 2003 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பின்னர் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்து விட்டார். உலகத்திலேயே தலை சிறந்த பில்டராக இருந்த ரோட்ஸ் 5 சிறந்த பில்டர்களை பட்டியலிட்டுள்ளார்.

ஆன்ட்ரூ சைமன்ஸ்: உள்ளூர் மற்றும் வெளியூர் போட்டிகளில் தான் பார்த்த நல்ல பில்டர்களுள் ஒருவர் ஆன்ட்ரூ சைமன்ஸ் என்று ஜான்டி ரோட்ஸ் பாராட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ சைமன்ஸ். இவர் ஒரு ஆக்ரோஷமான வீரரும் கூட.

Symonds-Cinemapettai.jpg
Symonds-Cinemapettai.jpg

ஹெர்ஷெல் கிப்ஸ்: தென்னாபிரிக்கா அணியின் அதிரடிஓபனர் கிப்ஸ் ஒரு தலைசிறந்த பில்டர். ஜான்டி ரோட்ஸ் இல்லாத சமயங்களில் இவர்தான் தென் ஆப்பிரிக்க அணிக்கு பில்டிங்கில் கை கொடுப்பார்.

பால் காலிங்வுட்: இங்கிலாந்து அணியின் சிறந்த கேப்டனாக செயல்பட்ட காலிங்வுட் கவர் திசையில் நிற்கக்கூடிய நல்ல பில்டர். இவரும் ஜான்டியின் லிஸ்டில் உள்ளார்.

Paul-Cinemapettai.jpg
Paul-Cinemapettai.jpg

ஏபி டிவில்லியர்ஸ்: 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அனைவராலும் அழைக்கக்கூடிய டிவில்லியர்ஸ் ஒரு அட்டகாசமான ஃபில்டர்.

Ab-Cinemapettai.jpg
Ab-Cinemapettai.jpg

சுரேஷ் ரெய்னா: இந்திய அணிக்காக விளையாடிய சுரேஷ் ரெய்னா ஒரு பெஸ்ட் பில்டர். முகமது கைப் மற்றும் ரெய்னா இருவரும் சேர்ந்து இந்திய அணிக்காக சிறந்த கேட்ச்களை பிடித்துள்ளனர்.

Raina-Cinemapettai.jpg
Raina-Cinemapettai.jpg

Trending News