வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சப்புன்னு போன ஜப்பான், சில்லுன்னு கூல் செய்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. கார்த்தியை வெறுப்பேத்தும் ஆசாமி

Jappan-Jigarthanda Double X: இந்த வருட தீபாவளிக்கு கார்த்தியின் ஜப்பான், கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. இதனாலேயே இந்த ரேஸில் யார் வெற்றி பெறுவார்கள் என ஒட்டுமொத்த ரசிகர்களும் கவனித்து வந்தனர்.

ஆனால் கார்த்தி அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டார். அதனாலேயே மிகப்பெரிய அளவில் ப்ரமோஷன் செய்யப்பட்ட ஜப்பான் இப்போது சப்புன்னு போயிருக்கிறது. அதே நேரத்தில் எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் கூட்டணியில் வெளிவந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இந்த தீபாவளியை தித்திப்பாக மாற்றி இருக்கிறது.

இதன் மூலம் கார்த்திக் சுப்பராஜ் அசத்தல் கம் பேக் கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதன்படி இப்படம் இதுவரை மொத்தமாக 22 கோடிகளை தட்டி தூக்கி இருக்கிறது. விடுமுறை முடிந்த பிறகு கூட இப்படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

Also read: தீபாவளி ரேசில் சரவெடி யார்.? ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் 3வது நாள் வசூல்

ஆனால் ஜப்பான் 12 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தால் இந்த தீபாவளி ரேசில் கார்த்திக் சுப்புராஜ் வெற்றி பெற்றுள்ளார். அது மட்டுமின்றி இப்படத்திற்கு பல திரை பிரபலங்களும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதைப்பற்றி தன் சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ள ப்ளூ சட்டை மாறன் கார்த்தியை நன்றாக வெறுப்பேற்றி இருக்கிறார்.

அதாவது தனுஷ், சிம்பு, புஷ்கர் காயத்ரி, பொன்ராம், சங்கர், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் ஜிகர்தண்டா 2 படத்தை பாராட்டி வருகின்றனர். அதை கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ரீ ட்வீட் செய்து வருகிறார். இவர்களில் ஒருவர் கூட ஜப்பான் படத்தை பார்க்கவில்லை. தப்பி தவறி பார்த்திருந்தாலும் பாராட்டவில்லை என நக்கலாக பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே கார்த்தியை அவர் பங்கம் செய்து வரும் நிலையில் ஜப்பான் வசூல் நிலவரமும் அவரை உசுப்பேத்தி இருக்கிறது. இதைப் பார்த்த கார்த்தியின் ரசிகர்கள் அவருக்கு சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆனாலும் ஜப்பான் ஆடியன்சுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது தான் உண்மை.

Also read: 15 வருடங்களாக லாரன்ஸை பிடித்து ஆட்டம் கெட்ட நேரம்.. ரூட்டை மாற்றினால் தான் பிழைக்கலாம்

Trending News