வியாழக்கிழமை, நவம்பர் 21, 2024

கம்பேக் கொடுத்தாரா ஜீவா.? மர்மம் நிறைந்த பிளாக் விமர்சனம்

Black Movie Review: கே ஜி பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான பிளாக் படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. ஜீவா நடிப்பில் கடந்த சில வருடங்களாக எந்த படமும் பெரிய அளவில் போகாத நிலையில் வித்யாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்த நடித்திருக்கும் படம் தான் பிளாக்.

வசந்தாக ஜீவாவும், ஆரண்யாவாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவரும் புதிதாக வீடு ஒன்று வாங்கி இருக்கின்றனர். கடற்கரை அருகில் இருக்கும் அந்த வீட்டிற்கு அருகில் தொடர் வீடுகள் உள்ள நிலையில் யாரும் இன்னும் குடி வரவில்லை.

விடுமுறையை கழிப்பதற்காக பிரியா பவானி சங்கர் மற்றும் ஜீவா இருவரும் அங்கு செல்கின்றனர். ஆனால் பக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் லைட் எரிவதை பார்த்து ஆச்சரியம் அடைகிறார்கள். அந்த வீட்டில் உள்ள மர்மம் மற்றும் அதில் இவர்கள் போலவே சில உருவங்கள் என மர்மங்கள் உலாவ தொடங்கியது.

ஜீவாவின் பிளாக் மூவி விமர்சனம்

அதன் பின் இந்த மர்மங்களுக்கெல்லாம் விடை கிடைத்ததா என்பதுதான் பிளாக் படத்தின் கதை. இந்த படத்தை சயின்ஸ் பிக்சன் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர். அதாவது ஹாலிவுட் வெளியான கோஹரன்ஸ் படத்தின் ரீமேக்காக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

படத்திற்கு பிளஸ் என்றால் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் தான் படத்தில் நிறைய நேரம் பயணிக்கிறார்கள். அவர்களின் நடிப்பு அபாரமாக இருக்கிறது. இதுபோன்ற ஹாரர் படங்களுக்கு ஒளிப்பதிவு மிகுந்த முக்கியமாக உள்ள நிலையில் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் கணக்கச்சிதமாக ஒவ்வொன்றையும் எடுத்திருக்கிறார்.

அதுவும் இருள் நேர காட்சிகள் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையில் சாம் சிஎஸ் அசத்தி இருக்கிறார். படத்திற்கு மைனஸ் சில இடத்தில் மர்மங்கள் மிகவும் குழப்பமாக அமைந்தது. ஹாலிவுட் தழுவல் என்பதால் பல இடங்களில் ஹாலிவுட் போலவே காட்சியை எடுக்க முயற்சி செய்திருந்தார் இயக்குனர். பெரிய அளவுக்கு அது கை கொடுக்கவில்லை.

சினிமாபேட்டை ரேட்டிங் : 2.75/3

- Advertisement -spot_img

Trending News