இந்தியாவின் அம்பானியின் ஜியோ நெட்வொர்க் தான் லீடிங்கில் உள்ள நிலையில் அம்மானிக்குப் போட்டியாக எலான் மஸ்க் இந்திய மார்க்கெட்டுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகிறது.
இந்தியா மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு. இங்கு உள்நாட்டு நெட்வொர்க்குகள் முதல் அயல்நாட்டு நெட்வோர்க் கம்பெனிகள் வரை போட்டா போட்டி போட்டு வருகின்றன. ஏனென்றால் இந்திய மார்க்கெட் ரொம்ப பெரிது. அதனால் இங்குள்ள சந்தையைக் கைப்பற்ற பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.
அதன்படி, ஏர்டெல், பி.எஸ்.என்.எல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் முன்னணி நெட்வொர்க் நிறுவனங்களாக இருக்கின்றன. இதற்கு முன்னர் இருந்த ஏர்செல் உள்ளிட்ட நிறுவனங்கள் இன்றில்லை. இத்துறையில் போட்டியிலும் சவாலும் அதிகம். அதேசமயம், இந்தியாவில் அலைக்கற்றையை ஏலம் விடுவதிலும், அதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதிலும் பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
அலைக்கற்றை ஏலம் இனி நடக்காது
ஏனென்றால் சில ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியின்போது 2 ஜி அலைக்கற்றை ஒதுகீட்டில் ஊழல் என்ற குச்சாட்டு நாட்டையே உலுக்கியது. அதன்பின், சுப்ரீம் கோர் இந்த ஊழலில் அதில் நடக்கவில்லை என்று தீர்ப்பளித்தது. இந்த நிலையில், தற்போது மத்தியில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அலைக்கற்றை ஏலம் இனி நடக்காது என்று கூறியுள்ளார்.
எனவே வெளி நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அலைக்கற்றை ஏலத்தை வாங்குவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதேசமயம் ஏற்கனவே இந்தியாவில் மொபைல் நெட்வொர்க்கிங்கில் லீடிங்கில் உள்ள ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு இது பின்னடைவு எனவும், இனிமேல் அலைக்கற்றை நிர்வாகை ரீதியாகவே ஒதுக்கப்படும் எனவும், அலைக்கற்றை ஏலம் விடப்படாது என அறிவித்துள்ளனர்.
அம்பானி, சுனில் மிட்டல் கோரிக்கைக்கு எலான் மஸ்க் எதிர்ப்பு
எப்பொதும் போலவே சேட்டிலைட் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏலம் முறையை பின்பற்ற வேண்டும் என ஜியோவின் அதிபர் அம்பானியும், ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டலும் கோரி வரும் நிலையில், நெட்வொர்க் துறையில் நுழையவிருக்கும் எலான் மஸ்க் இதற்கு எதிர்ப்பு கூறியிருக்கிறார்.
ஏற்கனவே தொட்டதெல்லாம் துலங்க வைக்கும் திறன் கொண்ட உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் எலான் மஸ்க்குக்கு சாதகமான மத்திய அரசின் முடிவு இருக்கிறது. இம்முடிவை எலான் மஸ்கின் ஸ்டார் லிங்க் மற்றும் அமேசான் ஓவர் ஜெப் பெகாசின் புராஜக்ட் கூபெர் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. ஏற்கனவே இத்துறையில் போட்டி இருக்கும் நிலையில், இங்குள்ள லீடிங் நிறுவனங்கள் வெளி நாட்டு நிறுவனங்களின் வருகையால் தங்கள் வாய்ப்பை இழக்கும் என தெரிகிறது.
ஜியோ, ஏர்டெல்லுக்கு பாதிப்பு
ஏற்கனவே இந்தியாவின் பிசினஸ் செய்ய தனது ஸ்டார் லிங்க் விண்ணப்பித்துள்ளார். இவரது நிறுவனம் ஒருவேளை இந்தியாவில் களமிறங்கினால் தனது புத்திசாலித்தனத்தால் இந்திய மார்க்கெட்டை தன் கைக்குள் கொண்டுவரலாம் எனவும், அது ஜியோவுக்கும் மற்ற நெட்வொர்க்குகளுக்கும் பாதகமாக அமைய வாய்ப்பிருப்பதாகவும், அதன் வாடிக்கையாளர்களும் கணிசமாகக் குறையலாம் என கூறப்படுகிறது.