செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

மூர்த்தியை சரமாரியாக கேள்வி கேட்கும் ஜீவா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருந்து வெளியே போகும் ஜோடி

எப்ப தான் இந்த சீரியலை சீக்கிரம் முடிச்சு தொலைவாங்க என்று எதிர்பார்த்த நேரத்தில் இப்பொழுது விறுவிறுப்பாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. கதையே இல்லாம குடும்பத்தின் ஒற்றுமையை மட்டுமே வைத்து போக்கஸ் பண்ணிக்கிட்டு இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இப்பொழுது அதே குடும்பங்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டு அண்ணன், தம்பிகள் மோதிக் கொள்ளும் அளவிற்கு கதை அமைந்து வருகிறது.

இந்த மாற்றத்திற்கு முதல் காரணமே நண்டு சைஸ்ல இருந்துகிட்டு இருக்க அந்த கண்ணன் பயனால் தான் பிரச்சனையே ஆரம்பித்தது. புதுசா பேங்க்ல வேலை பார்க்கிறோம் என்ற திமிரில் அடிக்கடி ஜீவாவை மட்டு மரியாதை இல்லாமல் குடும்பத்தின் அனைவரும் முன்னாடியும் கிண்டல் செய்துக்கிட்டு வந்தான். இதையெல்லாம் அமைதியாக தாங்கிக் கொண்டு இருந்த ஜீவா மனதளவில் ரொம்பவும் உடைந்து போயிருந்தான்.

Also read: அரைச்ச மாவை அரைச்சுகிட்டு இருக்காங்க.. இனி இவங்க கூட நடிக்க முடியாது என விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

இதற்கெல்லாம் அடுத்து உச்சகட்டமாக குடும்பத்தில் நான் தான் தலைவர் என்று காலரை தூக்கிக் கொண்டு இருந்த மூர்த்தியும் இப்பொழுது ஜீவாவை நடத்தும் விதம் பார்க்கும் பொழுது நம்மளுக்கே அவ்வளவு எரிச்சலா வருகிறது. அப்படின்னா அங்க இருக்க ஜீவாவை பத்தி சொல்லவா செய்யணும் அவனும் எவ்வளவுதான் அடி தாங்குவான். முக்கியமாக பண விஷயத்துல அவர் பண்றது கொஞ்சம் கூட நியாயமே இல்ல.

அதாவது மீனா குழந்தையுடன் தனியாக ஒரு இடத்தில் இருக்கிறாள். பின்பு அவர், ஜீவாவிடம்  நீ கூப்பிட வர முடியலனாலும் பரவாயில்லை ஆட்டோவை யாவது அனுப்பி வை என்று கூறியிருக்கிறார். அவரும் ஒரு ஆட்டோவை நிப்பாட்டி நீங்க மீனாவை கூட்டிட்டு வாங்க என்று சொல்ல அதற்கு அந்த ஆட்டோக்காரனும் பணம் கேட்க தானே செய்வான். அப்படி பணம் கேட்கும் போது நம்ம தலைவர் ஜீவா சட்டை பையை பிசுகி பாக்குறாரு. ஆனா அங்க ஒரு நயா பைசா கூட இல்லை.

சரி கடையில கல்லாப் பட்டியில் இருந்து பணத்தை எடுத்து கொடுப்போம் என்று பார்த்திருக்கிறான் ஆனால் அது பூட்டி இருக்கு. சரி சாவி எங்க தான் இருக்குன்னு சொல்லிட்டு அண்ணனிடம் போய் கேக்கலாம்னு பார்த்தா அதுக்கு வாய்ப்பு இல்லாம போயிடுச்சு. கடைசியா ஒரு வழியாக கடையை பாதி சாத்திவிட்டு மீனாவை அழைச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டாரு.

Also read: டிஆர்பி லிஸ்டில் இடம் பிடித்த டாப் 10 சீரியல்கள்.. அசுர வேகத்தை காட்டும் எதிர்நீச்சல்

அதுக்கப்புறம் வந்த நம்ம மூர்த்தி கடையில் ஆட்கள் நிற்கிறார்கள் ஆனால் ஜீவாவை காணும் என்று டென்ஷன் உடன் வீட்டிற்கு போய் இருக்கிறார். அப்புறம் அங்கு இருந்த ஜீவாவை பார்த்து ஏன்டா இப்படி பண்ண கடையை அடைத்து விட்டு நீ எங்க போன அப்படின்னு சொல்லி கேட்க. அண்ணா இந்த மாதிரி நிலைமை, நான் என்ன பண்ண முடியும் அதனால நான் போயிட்டேன் அப்படின்னு சொல்றாரு.

அதற்கு மூர்த்தி ஆட்டோவை அனுப்பி வைத்திருக்கலாம்ல என்று சொல்ல, ஜீவா அதற்கு என்னிடம் பணம் எங்க இருக்கு நான் என்ன பணத்தை எடுத்துட்டு ஓடவா போறேன் கல்லாப்பெட்டியை ஏன் பூட்டிய வெச்சி இருக்கீங்க என்று கோபத்தின் உச்சக்கட்டத்தை காட்டிவிட்டு வெளியே போய்விட்டார். இது நாள் வரை அமைதியாக இருந்த ஜீவா, இனி மேலும் இப்படி இருக்க முடியாது என்று பேசினது ஒரு விதத்தில் சரியாக இருந்தாலும் அடுத்த கட்டமாக இவர்கள் ஜோடியுடன் வெளியே போவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

Also read: கோபியின் வாரிசு என நிரூபித்த இனியா.. சக்களத்தி சண்டையை விட மோசமா இருக்கு

Trending News