Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களில் சிறகடிக்கும் ஆசை சீரியல்தான் டிஆர்பி ரேட்டிங்கில் 7.65 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. ஆனாலும் முதல் ஐந்து இடத்தில் வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் ரோகிணி ஒவ்வொரு விஷயங்களிலும் பொய்யும் பித்தலாட்டமும் பண்ணி குடும்பத்தில் இருப்பவர்களை மொத்தமாக ஏமாற்றிக் கொண்டு வருகிறார்.
ஆனால் அவருடைய முகத்திரையை கிழிக்கும்படி கதைகள் இல்லாமல் தொடர்ந்து முத்து மற்றும் மீனா அவமானப்பட்டு வருவதும் தோல்வியை சந்தித்து வருவதாலும் இந்த நாடகத்திற்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் வர ஆரம்பித்துவிட்டது. அதனாலையே பார்க்கும் பார்வையாளர்களும் குறைந்து விட்டார்கள். ஆனால் தற்போது எல்லாத்தையும் சரி பண்ணும் விதமாக பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கு ஏற்ப ரோகிணிக்கு சங்கு ஊத கனடாவில் இருந்து ஜீவா வந்துவிட்டார்.
ஜீவா வந்தாலே அவரை பிக்கப் பண்ணுவதற்கு முத்து தான் போவார். அதே மாதிரி ஜீவா, கனடாவில் இருந்து கிளம்பும்பொழுது முத்துவுக்கு போன் பண்ணி காலையில் 7:00 மணிக்கு என்னை ஏர்போர்ட்டுக்கு கூப்பிட வந்திருங்கள் என்று தகவலை கொடுத்து விட்டார். அதன்படி முத்துவும் ஜீவாவை கூப்பிடுவதற்கு ஏர்போர்ட்டுக்கு போய்விடுவார். பிறகு ஜீவா மற்றும் முத்து இருவரும் காரில் வரும் பொழுது ரிஜிஸ்ட்ரேஷன் விஷயமாக ரிஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ்க்கு போக வேண்டும்.
என்னை அங்கு கொண்டு போய் விடுங்கள் என்று முத்துவிடம் ஜீவா சொல்கிறார். முத்துவும் சரி என்று சொல்லிய நிலையில் இப்பொழுது எத்தனை நாளாக சென்னையில் இருப்பீங்க என்று கேட்கிறார். அதற்கு ஜீவா தெரியலை முத்து ரிஜிஸ்ட்ரேஷன் வேலையாக தான் வந்திருக்கிறேன். இந்த வேலை கடைசி முறை வந்திருக்கும்போதே முடிந்திருக்க வேண்டியது. ஆனால் இரண்டு பேரும் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணத்தை பறித்துக் கொண்டார்கள். அதனால் தான் மறுபடியும் அந்த வேலை விஷயமாக வந்திருக்கிறேன் என்று சொல்லிவிடுகிறார்.
உடனே முத்து உங்களை ஏமாற்றிய நபர்கள் யார் மட்டும் என்று சொல்லுங்கள் அவர்களை நான் கண்டுபிடித்து கூட்டிட்டு வருகிறேன் என்று கேட்கிறார். ஆனால் ஜீவா அதெல்லாம் வேண்டாம் அவங்களை சந்திக்காமல் இருந்தாலே எனக்கு போதும் என்று சொல்லி ரிஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ்க்கு போய் விட்டார். ஆனால் அதே ரிஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ்க்கு தான் மனோஜ் வாங்க நினைத்த ECR வீட்டை ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணுவதற்காக ரோகிணியை கூட்டிட்டு வந்திருக்கிறார்.
ஆனால் மனோஜ் ஏமாந்திருக்கிறார் என்று தெரியாமல் ஏமாற்றும் கும்பலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் ரோகிணி மனோஜ் மற்றும் ஜீவா 3 பேரும் சந்தித்துக் கொள்கிறார்கள். ஆனால் ரோகிணி மனோஜை பார்த்து கடுப்பான ஜீவா கோபப்பட்டு முத்துவின் காருக்கு திரும்ப வந்து விடுகிறார். அப்பொழுது முத்து என்னாச்சு வந்த வேலை முடிந்து விட்டதா என்று கேட்கிறார். அதற்கு ஜீவா நான் யாரை பார்க்க கூடாது என்று நினைச்சேனோ அவங்களே திரும்ப பார்க்கும் படியாக அமைந்துவிட்டது என்று சொல்கிறார்.
அப்பொழுது முத்து அந்த ஏமாற்றும் நபர்களை பற்றி தான் சொல்கிறீர்களா? அவர்கள் இங்கே இருக்கிறார்களா யார் என்று காட்டுங்கள் என ஜீவாவிடம் கேட்கிறார். உடனே ஜீவா, ரோகிணி மற்றும் மனோஜை கைகாட்டி விடுகிறார். இவர்கள் இரண்டு பேரையும் முத்து பார்த்த நிலையில் எல்லா விஷயத்தையும் தெரிந்து கொள்ள ஜீவாவிடம் நடந்த உண்மையை பற்றி கேட்கிறார்.
அப்பொழுது ஜீவா, மனோஜை ஏமாற்றிய பணத்தைப் பறித்ததையும் திரும்ப கனடாவில் இருந்து வந்த பொழுது ரோகினி என்னை பிடித்து வட்டியும் முதலுமாக முப்பது லட்ச ரூபா பணத்தை திரும்ப பெற்றார் என்பதையும் முத்துவிடம் ஒன்று விடாமல் சொல்லப் போகிறார். அதன் பிறகு தான் முத்து யோசித்த நிலையில் அந்த 30 லட்ச ரூபாய் பணத்தை வைத்து தான் ஷோரூமே ஆரம்பித்திருக்கிறார்கள். அது என்னுடைய அப்பாவின் பணமாச்சு, அதை எப்படி ஏமாற்றி இவர்கள் பிசினஸ் பண்ணலாம் என்று முத்து வீட்டில் போய் சொல்லப் போகிறார்.
அதே நேரத்தில் ஏமாற்றும் கும்பல் ரிஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ்க்கு வராமல் மொத்தமாக நாமத்தை போட்டு விட்டதால் அதன் பிறகு தான் மனோஜ் 30 லட்சம் கொடுத்து ஏமாந்து விட்டோம் என்ற உண்மையை தெரிந்து கொள்ளப் போகிறார். உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணா என்பதற்கு ஏற்ப ஏமாந்து போய்விட்டார்கள். பிறகு முத்து சொன்ன அந்த 30 லட்ச ரூபாயும், அந்த வீட்டில் ஏமாந்த பணத்தையும் பற்றி குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வரப்போகிறது.
மனோஜ் மற்றும் ரோகினி கண்மூடித்தனமாக நம்பிய விஜயாவுக்கு இந்த விஷயங்கள் அனைத்தும் தெரிய வரும் பொழுது மூஞ்சியை எங்க கொண்டு போய் வைக்கப் போறார் என்பது தெரியவில்லை. இதோடு மட்டுமில்லாமல் இனி அடுத்தடுத்து ரோகிணி ஒவ்வொரு விஷயங்களும் மாட்டி அவருடைய உண்மையான ரகசியத்தை முத்து வெளிச்சம் போட்டு காட்டப் போகிறார். ஆடிய ஆட்டமென்ன பேசிய பேச்சு என்ன இப்பொழுது நிலைமை என்ன என்பதற்கு ஏற்ப ரோகிணி அவமானப்பட்டு தன்னந்தனியாக தத்தளிக்க போகிறார்.