செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அப்பாவுக்கு போட்டியாக களமிறங்கிய ஜீவா.. சின்ன கல்லை போட்டு பெத்த லாபம் பார்க்க போட்ட பிளான்

நடிக்க வந்த புதிதில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த ஜீவாவுக்கு சமீபத்தில் வெளியாகும் எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. அந்த வகையில் காபி வித் காதல், வரலாறு முக்கியம் போன்ற திரைப்படங்கள் இவருக்கு அடுத்தடுத்த தோல்விகளை தான் கொடுத்திருக்கிறது. இதனால் அவர் எப்படியாவது ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.

ஆனாலும் அவரை வைத்து படங்களை தயாரிப்பதற்கு தற்போது யாரும் முன் வரவில்லை. அதனால் அவரே ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார். ஏற்கனவே இவருடைய அப்பா ஆர் பி சவுத்ரி பல வருடங்களாக தமிழ் சினிமாவில் தரமான குடும்ப படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

Also read: தயாரிப்பாளர்கள் தலையில் துண்டு போட்ட 6 நடிகர்கள்.. சாக்லேட் முகத்தால் பரிதவிக்கும் ஜீவா

அந்த வகையில் அவர்களுடைய சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிலையில் ஜீவா தன்னுடைய அப்பாவுக்கு போட்டியாக இப்படி களமிறங்கியுள்ளதற்கு பின்னணியில் ஒரு பெரிய காரணம் கூறப்படுகிறது. அதாவது அவர் இந்த நிறுவனத்தின் மூலம் வெப் தொடர்களை தான் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.

தற்போது ஓடிடி தளங்களில் வெப் தொடர்களுக்கு தான் அதிக மவுசு இருக்கிறது. அதனாலேயே முன்னணியில் இருக்கும் நடிகர், நடிகைகள் பலரும் இந்த தொடர்களில் அதிக ஆர்வத்துடன் நடித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் இந்த வெப் சீரிஸ் மூலம் அவர்களுக்கு அதிக அளவு லாபமும் கிடைக்கிறது.

Also read: ஜீவா வளர்ச்சியை கெடுத்த 5 படங்கள்.. அதல பாதாளத்திற்குச் சென்ற மார்க்கெட்

அதை மனதில் வைத்து தான் ஜீவா தற்போது மிகப்பெரிய திட்டத்துடன் இறங்கி இருக்கிறார். அதாவது அவர் இப்போது கம்மியான செலவில் வெப் தொடர்களை தயாரிக்க இருக்கிறாராம். அதன் மூலம் அவருக்கு நிச்சயம் சொல்லிக் கொள்ளும்படியான லாபம் கிடைக்கும் என்பதுதான் அவருடைய எண்ணம். இப்போது வெள்ளித்திரை அவருக்கு கை கொடுக்காத நிலையில் அவர் தயாரிக்கும் வெப் தொடர்களில் அவரே நடிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்.

இதை வைத்தே ஓரளவுக்கு வெற்றிகளை கொடுத்து தன்னுடைய இடத்தை மீண்டும் பிடித்து விட்டால் வெள்ளித்திரையில் அவருக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்து விடும். அதன் பிறகு மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என்ற மிகப்பெரிய திட்டத்தை அவர் போட்டு வருகிறாராம். அவருடைய இந்த பிளான் எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்பதை நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Also read: படத்தில் கல்லா கட்ட முடியாமல் ரூட்டை மாற்றிய ஜீவா.. இதுலயாவது நல்ல நேரம் வரட்டும்

Trending News