புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மன்னிப்பும் கேட்டு, 2500 கோடி சம்பளமுமா.? மீண்டும் விஸ்வரூபம் எடுக்கப் போகும் ஜாக் ஸ்பாரோ

பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் சீரிஸ் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றவர் ஜானி டெப். அதிலும் அவர் நடித்த ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. மேலும் ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக ஜானி டெப் திகழ்ந்து வந்தார்.

இந்நிலையில் ஆம்பர் ஹெர்ட் என்பவரை ஜானி டெப் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் கிட்டத்தட்ட 25 வயது வித்யாசம் உள்ளது. ஆனால் இவர்கள் திருமணம் செய்துகொண்ட 15 மாதங்களிலேயே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

மேலும் 2018 இல் ஆம்பர் குடும்ப வன்முறையால் தான் பாதிக்கப்பட்டதாகவும், குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்த கட்டுரையில் ஜானி டெப்பின் பெயர் குறிப்பிடவில்லை. ஆனால் இந்த கட்டுரை வெளியான பிறகு ஹாலிவுட் வட்டாரத்தில் கடுமையான அதிர்வலைகள் எழுந்தது.

இதனால் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் சீசன் 6 இல் இருந்து ஜானி டெப் நீக்கப்பட்டார். அது மட்டுமல்லாமல் மற்ற பட வாய்ப்புகளையும் இதனால் ஜானி டெப் இழந்தார். மேலும் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விதித்ததாக ஆம்பர் மீது ஜானி டெப் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் இந்த வழக்கு முடிவடைந்துள்ளது. அதில் ஜானி டெப்க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஜானி டெப்விற்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை ஆம்பர் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது ஜானி டெப் குற்றமற்றவர் என்பதால் தற்போது படவாய்ப்புகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளது.

பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் சீரிஸில் நடிக்க ஜானி டெப்பை டிஸ்னி நிறுவனம் அழைத்துள்ளது. அவரிடம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளதாகவும், 2500 கோடி சம்பளமாக தர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மீண்டும் ஜாக் ஸ்பாரோவாக ஜானி டெப் மிரட்ட வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News