சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து நல்ல விமர்சனங்களைப் பெற்ற ஜான் விஜய் மீது பிரபல சீரியல் நடிகரின் மனைவியும் தொகுப்பாளருமான பிரபலம் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு மீது புகார் கொடுத்ததை மீண்டும் ரசிகர்கள் தூசி தட்டியுள்ளனர்.
குணச்சித்திர வேடம் மற்றும் மிரட்டலான வில்லன் வேடம் போன்றவற்றில் கோலோச்சியவர் ஜான் விஜய். அருள்நிதி நடிப்பில் வெளியான மௌனகுரு படத்தில் இவருடைய நடிப்பு மிரட்டலாக இருந்தது. அந்த படத்தில் ஜான் விஜய்யை பார்த்து பயப்படாதவர்களே இருக்க முடியாது.
அதேபோல ஒரு சில படங்களில் நல்ல நகைச்சுவை நடிகராகவும் படம் முழுக்க வலம் வந்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் அமேசான் தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள சார்பட்டா பரம்பரை படத்தில் இவருடைய டாடி கதாபாத்திரம் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
ஆனால் ஜான் விஜய்யை பிடிக்காத சிலர் ஏற்கனவே இவர் பெண்களிடம் தவறாக நடந்து கொள்கிறார், இவருக்கு எப்படி படத்தில் வாய்ப்பு கொடுத்தீர்கள்? என ஒருபக்கம் பழைய பிரச்சனையை கிளப்பி விட்டுள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி என்பவர் ஜான் விஜய்யை ஒரு தொலைக்காட்சிக்காக பேட்டி எடுத்துள்ளார்.
அந்தப் பேட்டி முடிந்ததும் இரவு ஜான்விஜய் ஸ்ரீரஞ்சனிக்கு போன் செய்து பேசியபோது நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும்? என்று கேட்டாராம். காலையில் சொல்கிறேன் என கூறிய ரஞ்சனியிடம் கொஞ்ச நேரம் பேசு என்று சொல்லிவிட்டு, அவரிடம் உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசி தொல்லை கொடுத்துள்ளார். அதேபோல் காலா படப்பிடிப்பில் தன்னிடம் செல்பி எடுக்க வரும் பெண்களிடம் முத்தம் கொடுக்கச் சொல்லியும் டார்ச்சர் செய்ததாக ஸ்ரீரஞ்சனி குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீரஞ்சனி வேறு யாருமில்லை. விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சூப்பர்ஹிட் சீரியலில் ப்ரியா பவானி சங்கருக்கு ஜோடியாக நடித்த அமிட் பர்கவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.