புதன்கிழமை, ஜனவரி 1, 2025

சார்பட்டா டாடி ஜான் விஜய்க்கு இவ்வளவு அழகான மனைவியா? செம வைரலாகும் புகைப்படம்

ரேடியோ ஜாக்கியாக இருந்து நடிகராக மாறியவர் ஜான் விஜய். தற்போது தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்களில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். வாரவாரம் வெளியாகும் படங்களில் குறைந்தது ஒரு படத்திலாவது வரை பார்த்து விடலாம்.

அந்தளவுக்கு குணச்சித்திர கதாபாத்திரங்களில் கட்டம் கட்டி கலக்கிக் கொண்டிருக்கிறார். காமெடி வில்லனாக இருந்தாலும் சரி, முரட்டு வில்லனாக இருந்தாலும் சரி, முழுநேர காமெடி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி.

எது கொடுத்தாலும் தன்னுடைய பாணியில் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி விருந்து படைத்து விடுகிறார். அந்த வகையில் சமீபத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் இவருடைய டாடி கதாபாத்திரம் சூப்பர் ஹிட் அடித்தது.

ஜான் விஜய்க்கு தமிழில் மட்டுமல்லாமல் மலையாள சினிமாவிலும் ஒரு நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிட வேண்டியது. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற லூசிபர் படத்தில் முக்கிய போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

அதிலும் இவரது மிரட்டலான முரட்டுத்தனமான கதாபாத்திரம் பார்ப்பவர்களை மிரள வைத்தது. இப்படிப்பட்ட முரட்டு ஆளுக்கு இவ்வளவு அழகான மனைவியா எனும் அளவுக்கு பிரபல அரசியல்வாதியின் மகளான மாதவி இளங்கோவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் விஜய்.

அவர்களது சமீபத்திய குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. ஜான் விஜய் ஒரு பிரபலமான அரசியல் பின்புலம் உள்ளவர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

johnvijay-madhavi-cinemapettai
johnvijay-madhavi-cinemapettai

Trending News