தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஜோதிகா சக நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் கொண்டு செட்டிலானார். திருமணத்திற்கு பின்னர் சில காலம் நடிப்பதை தவிர்த்து சினிமாவை விட்டு விலகி இருந்த ஜோதிகா 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இப்படம் நல்ல வரவேற்பை பெறவே தொடர்ந்து காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றன. குறிப்பாக பொன்மகள் வந்தாள் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதையும், குழந்தைகள் பெற்றோரிடம் எதையும் மறைக்க கூடாது என்பதையும் இப்படம் மூலம் தெளிவாக கூறியிருப்பார்கள். இந்நிலையில் இப்படம் மூலம் உண்மையாகவே ஒரு பாலியல் வழக்கில் திருப்பம் நிகழ்ந்துள்ளது.
ஆம் சென்னை ராயபுரத்தை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு அவரது 48 வயது உறவினர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதனால் செய்வதறியாமல் தவித்து வந்துள்ளார் அந்த சிறுமி. இந்நிலையில் பொன்மகள் வந்தால் படத்தில் இடம்பெற்ற “தாயிடம் எதையும் மறைக்க கூடாது” என்ற காட்சியை தொலைக்காட்சியில் பார்த்து அவரது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார்.
![ponmagal-vanthal-movie-review](https://www.cinemapettai.com/wp-content/uploads/2020/05/ponmagal-vanthal-movie-review.jpg)
இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல இது போன்ற மாற்றங்களையும் ஏற்படுத்தும் என்பது நிருபனமாகியுள்ளது.