வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கள்ளச்சாராய சாவு, பின்னணியில் மர்ம அரசியல்.. திமுகவை தூக்க டெல்லி அரசு எடுத்த துருப்புச் சீட்டு – பாண்டியன்

Kallakurichi hooch tragedy: கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் 49 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 30-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக இருப்பதாக அந்தந்த மருத்துவமனைகளை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

நேற்றிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த அத்தனை அரசியல் கட்சிகளும் இந்த நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் தான் கூடி கிடக்கிறார்கள். ஒரு சாவுக்கு சென்ற இடத்தில் பாக்கெட் சாராயம் அருந்திய அத்தனை பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இதைத் தாண்டி அரசியல் விமர்சகர் பாண்டியன் நேற்று கொடுத்திருக்கும் பேட்டி பார்ப்பவர்களை அதிர வைத்திருக்கிறது. இப்படியும் கூட நடக்குமா, இவர் சொல்வது உண்மையா என பல விவாதங்கள் இப்போது எழுந்து வருகிறது.

பாண்டியன் தன்னுடைய பேட்டியில் அந்த சாராயத்தில் விஷம் கலந்திருப்பதாக சொல்லி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இது திட்டமிட்ட சதி, திமுக அரசுக்கு எதிராக டெல்லி அரசு இப்படி செய்து கொண்டிருக்கிறது எனவும் பேசி இருக்கிறார்.

மேலும் நேற்று கைது செய்யப்பட்ட கன்னுக்குட்டி என்பவர் 30 வருடங்களுக்கும் மேலாக சாராயம் விற்று வருகிறார். இதுவரை மரணம் ஏற்படாத நிலையில், எப்படி இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கிறது. கடந்த வருடம் செங்கல்பட்டு மற்றும் மரக்காணம் பகுதியில் பாக்கெட் சாராயம் குடித்து உயிரிழந்ததற்கு காரணம் அது பழைய சாராயம் என்பதால் தான்.

அப்படி இருக்கும் பொழுது எந்த காரணமும் இல்லாமல் இப்படி மரணங்கள் நடந்ததுதான் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. அதிமுக ஆட்சியிலும் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிற்குள் வராத நிறைய போலீஸ் அதிகாரிகள் டெல்லி அரசுக்கு கீழ் இருந்தார்கள்.

அதே மாதிரி தான் ஸ்டாலின் ஆட்சியிலும் இப்படிப்பட்ட அதிகாரிகள் இருக்கிறார்கள். மேலும் தமிழக போலீஸ் துறையில் இருக்கும் பல பேரை அண்ணாமலைக்கு தெரியும். தமிழ்நாட்டில் இப்போதைக்கு பலமான எதிர்கட்சி திமுக என்பதால் இப்படியான சதித்திட்டம் நடக்கிறது என பாண்டியன் தன்னுடைய பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

கள்ளக்குறிச்சி மக்களுக்கு தோள் கொடுத்த தளபதி

Trending News