வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஒன்னுக்கு 3 பேரை காதலித்த ஜூலி.. என்னடா இது, வீரத்தமிழச்சிக்கு வந்த சோதனை!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அதை பிக்பாஸில் கெடுத்துக் கொண்டவர்தான் ஜூலி. பெயர் கெட்டாலும் சமூக வலைத்தளத்தில் அவருக்கு இருக்கும் வரவேற்பை பார்த்து ஏகப்பட்ட விளம்பர நிகழ்ச்சிகள் அவருக்கு கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் போட்டோ ஷூட் என நன்றாக சம்பாதித்து வந்தார்.

ஜூலி ஆரம்பத்தில் ஒருவரை காதலித்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அந்த நேரத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தவரைதான் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை காதலித்து வந்துள்ளார் ஜூலி. அவரது பெயர் மணிஷ். சலூன் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

முதல் காதல் பிரிந்த போது அவருக்கு உறுதுணையாக இருந்த மணீஷ் மீது ஜூலிக்கு இரண்டாவது காதல் ஏற்பட இருவரும் கடந்த சில வருடங்களாக ஒன்றாக ஊர் சுற்றி, ஒரே இடத்தில் தங்கி, ஒரு மாதிரியாக வாழ்ந்து வந்துள்ளனர். ஜூலியும் தன்னுடைய காதலன்தானே என்று தங்கச்சங்கிலி, பைக் என வாங்கிக் கொடுத்து காதலனை நல்ல வசதியாக வைத்திருந்தார் போல.

ஆனால் சமீபகாலமாக ஜூலிக்கு வேறு ஒரு நபருடன் நெருக்கம் அதிகரித்ததாக தெரிகிறது. இதனால் மனிஷுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதை கண்டுபிடித்ததால் மணிஷ், ஜுலியுடன் வாக்குவாதம் செய்ய ,தன்னிடம் காதலன் பைக், தங்கச்சங்கிலி ஆகியவற்றை வாங்கி ஏமாற்றி விட்டதாக காவல்நிலைய படியேறினார்.

விசாரணையில் ஜூலி இன்னொருவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. பிரச்சினையான அடுத்த நாளே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாலியான பதிவை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் வேலை வெட்டி இல்லாத சிலர், தன்னுடைய விஷயங்களை பார்த்து கீழ்த்தரமாக பேசுவதைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். சும்மாவே ஜூலியை வச்சு செய்யும் நெட்டிசன்கள் இப்படி ஒரு விஷயம் கிடைத்தால் சும்மா விடுவார்களா.

Trending News