ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அச்சு அசல் மாளவிகா மோகனன் போலவே இருக்கும் ஜூலி புகைப்படம்.. இணையத்தில் கொந்தளித்த ரசிகர்கள்

சமீபகாலமாக சமூக வலை தளங்களில் வீரத் தமிழச்சி ஜூலியின் அட்டகாசம் தாங்க முடியவில்லையாம். கருத்து சொல்கிறேன் என ஒரு பக்கம் வீடியோ, மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட் என ரசிகர்களை படாதபாடு படுத்தி வருகிறார்.

ஜூலி வெறியர்கள் சிலர் இருந்தாலும் ஜூலியை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்வதற்காக ஒரு கூட்டம் உள்ளது. இப்போதெல்லாம் கிண்டல் செய்தால் தான் பிரபலமாக முடியும் என்பதை தெளிவாக உணர்ந்து வேண்டுமென்றே வீடியோக்கள் போட்டு வருகிறார் போல.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் ஜூலி. அதுவும் ஹீரோயினாக. அம்மன், அனிதா எம்பிபிஎஸ் போன்ற படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தை பரபரக்க வைத்தது.

ஆனால் ஜூலி அந்த கதாபாத்திரங்களில் நடிக்க பல எதிர்ப்புகள் கிளம்பியதால் அந்த படங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இனியும் அந்த படங்கள் உருவாகுமா என்பது கேள்விக்குறிதான்.

இருந்தாலும் வயித்து பொழப்புக்கு ஏதாவது செய்தாக வேண்டுமல்லவா. இதனால் போட்டோஷூட் மற்றும் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி என தொடர்ந்து தன்னுடைய பிரபலத்தை பயன்படுத்தி செல்வமும் செழிப்பாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் பார்ப்பதற்கு மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் போலவே இருப்பதாக ஒருவர் மீம்ஸ் தயாரித்து ஜூலிக்கு அனுப்பியுள்ளார். இதனால் உணர்ச்சிவசப்பட்ட ஜூலி அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, தற்போது பல கேலி கிண்டல்களுக்கு உள்ளாகியுள்ளது அந்த புகைப்படம்.

julie-malavika-mohanan-memes
julie-malavika-mohanan-memes

Trending News