வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

இந்தியாவிலேயே விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய என்டிஆர்.. ஃபேன்சி நம்பரே இத்தனை லட்சமா.?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் ஜூனியர் என்டிஆர் ஒரு பேன்சி நம்பருக்காக சுமார் 17 லட்சம் ரூபாய் செலவழித்துள்ள செய்தி டோலிவுட் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரை உலகையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. நடிகர் ஜூனியர் என்டிஆர் சமீபத்தில் லம்போர்கினி உருஸ் கிராஃபைட் கேப்ஸ்யூல் (Lamborghini Urus Graphite Capsule Edition) என்ற சொகுசு காரை வாங்கினார்.

மிக அதிக விலை கொண்ட மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் திறன் கொண்ட சொகுசு கார் என்பதால் தெலுங்கு திரையுலகமே ஜூனியர் என்டிஆரை ஆச்சரியமாக பார்த்தது. மேலும் அதிக விலை உயர்ந்த காரை வாங்கியதால் இந்திய வாகன உலகின் தலையங்கத்திலும் ஜூனியர் என்டிஆர் இடம் பிடித்தார். இந்நிலையில் மற்றொரு ஆச்சரியமளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது புதிய காரின் பதிவெண்ணிற்காக பல லட்சங்களை வாரி இறைத்துள்ளாராம். சமீபத்தில் ஹைதராபாத் ஆர்டிஓ அதிகாரிகள் டிஎஸ் 09 எஃப்எஸ் 9999 (TS 09 FS 9999) என்ற எண்ணை ஏலம் விட்டுள்ளனர். மிகவும் விறுவிறுப்பாக நடை பெற்ற ஏலத்தில் பலர் இந்த பேன்சி எண்ணை வாங்க லட்ச கணக்கில் ஏலம் கேட்டனர்.

இந்நிலையில் இந்த ஏலத்தில் பங்கேற்ற ஜூனியர் என்டிஆர் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் சுமார் ரூ. 17 லட்சத்திற்கு ஏலம் கேட்டிருக்கிறார். இதை தொடர்ந்து ஆர்டிஓ அதிகாரிகள் ஜூனியர் என்டிஆருக்கே அப்பதிவெண்ணை வழங்குவதாக அறிவித்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த டோலிவுட் திரையுலகையே மிரள வைக்கும் வகையில் நிகழ்ந்துள்ளது.

jr-ntr-car
jr-ntr-car

ஜூனியர் என்டிஆரிடம் இருக்கும் பல கார்கள் 9999 எனும் பதிவெண்ணை கொண்டதாகவே காட்சியளிக்கின்றதாம். அதுமட்டுமின்றி இவரின் தாத்தா என்டிஆர் தாத்தாவின் அப்பா தொடங்கி பலர் 9999 என்ற பதிவெண் கொண்ட கார்களை பயன்படுத்தி உள்ளனர். எனவே இதன் காரணமாகவே ரூ. 17 லட்சம் செலவில் இந்த பேன்சி பதிவெண்ணை அவர் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News