Director Vetrimaran: ஆர் ஆர் ஆர் படத்தின், வெற்றிக்கு பிறகு கொரதல சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் 30 படம் இந்த வருடம் வெளியாகும் என்ற நிலையில், தற்பொழுது இவர் வெற்றிமாறனை நெருக்கடி கொடுப்பதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தனுஷின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அசுரன். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. இப்படத்தின் வெற்றியை குறித்து தெலுங்கு படத்தில் வெற்றிமாறனுக்கு வாய்ப்பு கிடைத்ததாம். ஆனாலும் அதை இவர் ஒத்துக் கொள்ள வில்லையாம்.
அதிலும் குறிப்பாக ஜூனியர் என்டிஆர் இவரை வந்தே ஆக வேண்டும் என வலுக்கட்டாயம் படுத்தினாராம். மேலும் தன்னை வைத்து படம் பண்ண வேண்டும் என்பதற்காக ஒரு தொகையை அட்வான்ஸ் ஆக கையில் வைத்து சென்று விட்டாராம். இவரும் சரி அப்புறம் பார்த்துக்கலாம் என்று நினைப்பில் பல வருடங்கள் சென்று இருக்கின்றன.
தற்போது வரை எந்த தொந்தரவும் இல்லாமல் இருந்து வந்த வெற்றிமாறனுக்கு திடீரென்று என் டி ஆர் இடம் இருந்து அழைப்பு வந்ததாம். இதை சற்றும் பொருட்படுத்தாமல், வெற்றிமாறன் விடுதலை படத்தின் பார்ட் 2 எடுக்க ஆரம்பித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து சூர்யாவை வைத்து வாடிவாசல் படமும் கமிட்டாகியுள்ள நிலையில் இது போன்ற செய்தி அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
ஏற்கனவே விடுதலை படத்தின் பார்ட் 2 ஆல் வாடிவாசல் நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கு நடுவில் தெலுங்கு படம் வேறயா என்று புலம்பி வருகிறார் வெற்றிமாறன். தற்பொழுது உண்மையை சொன்னால் கூட இவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் பணத்தை வாங்கிக் கொண்டு இத்தனை வருடம் காக்க வைத்ததல்லாமல் இல்லாத நொண்டி சாக்கு கூறுவதாக நினைப்பார்கள் என்ற கவலையில் இருக்கிறார் வெற்றிமாறன்.
ஒருவேளை விடுதலை பார்ட் 2விற்கு பிறகு இவர் என் டி ஆர் ஐ வைத்து படம் இயக்குவதாக இருந்தால் அதைத் தொடர்ந்து தெலுங்கு பக்கம் தான் வாய்ப்பு கிடைக்கும் என்பதை குறித்து தீவிர யோசனையில் இருந்து வருகிறார் வெற்றிமாறன். மேலும் இவரை தெலுங்கில் எப்படியாவது இழுத்துவிட வேண்டும் என்று பல முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
Also Read: கமல், கவுண்டமணி காம்போவில் அசத்திய 5 படங்கள்.. வசூலில் ரஜினியை பின்னுக்கு தள்ளிய இந்தியன்