வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

விஜய்க்கு தலைக்கணம் அப்படின்னு.. மேடையை தெறிக்க விட்ட ஜூனியர் என்டிஆர்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக சமீபத்திய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஜனவரி முதல் வாரத்தில் ராஜமவுலி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ரத்தம் ரணம் ரவுத்திரம் (RRR) என்ற படம் வெளியாக இருந்த நிலையில் தற்போது கொராணா காரணமாக அந்த படத்தின் வெளியீட்டை ஏப்ரல் மாதத்திற்கு படக்குழுவினர் தள்ளி வைத்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டனர்.

ஆனால் படம் எப்படியும் ரிலீஸ் ஆகிவிடும் என்ற எதிர்பார்ப்பில் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என அனைத்து மொழிகளிலும் பறந்து பறந்து படத்தை பிரமோட் செய்து கொண்டிருந்தனர் படக்குழுவினர். அந்த புரமோஷன் நிகழ்ச்சிகள் அனைத்திலும் ராஜமவுலி ஜூனியர் என்டிஆர் ராம்சரண் என படத்தில் பணியாற்றிய முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சமீபத்தில் விஜய் டிவியில் RRR படத்தின் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் ஜூனியர் என்டிஆர் தளபதி விஜய் பற்றி ஆஹா ஓஹோ என புகழ்ந்து பேசியது தமிழ் சினிமாவில் உள்ள விஜய் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து விடும் படி அவருக்கு அமைந்துவிட்டது.

ஜூனியர் என்டிஆர் விஜய் பற்றி கூறுகையில் இன்னைக்கு சூப்பர் ஸ்டார் லெவலில் இருக்கும் தளபதி விஜய் அந்த வெற்றியையும் புகழையும் தன்னுடைய தலைக்கு எடுத்துக் கொள்ளாமல் தலைக்கனம் இல்லாமல் பழகி வருவது தனக்கு பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் மாஸ்டர் படம் பார்த்து விட்டு நீண்ட நேரம் விஜயுடன் உரையாடிய தாகவும் தெரிவித்துள்ளார்.

விஜய் தனக்கு ஒரு நல்ல நண்பராக மட்டுமில்லாமல் சினிமாவில் எப்படி இருக்க வேண்டும் என தனக்கு ஒரு ஆசானாக விளங்கி வருவதாக தெரிவித்துள்ளார் ஜூனியர் என்டிஆர். இவர் விஜய் பற்றி இப்படிப் பேசியது தளபதி ரசிகர்களை பெருமைப்பட வைத்துள்ளது. இதனால் இனி ஜூனியர் என்டிஆரின் படங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருக்கும் எனவும் தெரிகிறது.

Trending News